அமைச்சர்கள் இரண்டு பேர் தங்கள் பக்கம் வரப்போவதாக ஆளும் கட்சி வட்டாரத்துக்கு பிபீ ஏற்றுவதற்காக சும்மாவாச்சும் அள்ளிவிடுகிறாராம் ஆக் ஷன் ஹீரோ கட்சியின் ‘வில்வித்தை நாயகன்’.
ஆனால், ‘கோட்டையன்’ தலைவரை ஈர்த்தது போல் முக்குலத்தோர், முத்தரையர், நாடார், நாயக்கர், பட்டியலினம் என சாதிக்கு ஒருவர் வீதம் மற்ற கட்சிகளில் இருக்கும் முக்கிய தலைகளை தங்கள் பக்கம் கொண்டுவர சார்ட் போட்டிருக்கிறதாம் ஆக் ஷன் ஹீரோ கட்சி.
அதேசமயம், திருச்சி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் ஆக் ஷன் ஹீரோ இருக்கிறாராம். இரண்டாவது சாய்ஸாக விக்கிரவாண்டியை வைத்திருக்கிறாராம்.