தமிழகம்

விசில் கட்சியை ஆதரித்த அழையா விருந்தாளிகளுக்கு 25சி? | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

இலைக் கட்சி சைடில் இருந்து அழையா விருந்தாளியாக வந்து விசில் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு முன் ‘கவனிப்பாக’ 25 ‘சி’ கொடுத்தார்களாம். விசில் பார்ட்டி ‘குலுக்கல் மாப்பிள்ளையின்’ ‘ரோஜா மாமியார்’ தான் இந்த பட்டுவாடாக்களை ‘பக்குவமாக’ பார்த்துக் கொண்டாராம். மேலும், இலைக் கட்சி முன்னாள் மாண்புமிகுக்கள் சிலருக்கும் ‘ரோஜா மாமியாருக்கும்’ அமைச்சரவையில் இடம் கேட்டு அச்சாரம் போட்டார்களாம்.

ஆனால், “இப்போதுள்ள நிலையில் கூட்டணிக்குள் குழப்பம் வரும். அத்துடன், சட்டச் சிக்கலும் இருக்கிறது. உங்களுடைய ஆதரவில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முடிவை நோக்கி சபாநாயகர் நகர்ந்தால் அதுவும் ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும். எனவே, நீங்கள் 25 பேரும் உங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்தியுங்கள். உங்களை நாங்கள் ஜெயிக்க வைக்கிறோம்” என்று விசில் பார்ட்டி விற்பன்னர்கள் விளக்கம் கொடுத்தார்களாம்.

ஆனால், கொங்கு ‘மணியானவர்’ உள்ளிட்ட முன்னாள் மாண்புமிகுக்கள் சிலர் இந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டார்களாம். மொத்தத்தில் அதிகாரத்தை எதிர்பார்த்து ‘ஆட்டையைக்’ கலைத்துவிட்டு வந்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இப்போது அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்களாம்.

இதற்கிடையே, அமைச்சரவைக்குள் சேர்க்க ‘அரசு’ புள்ளியை சிபாரிசு செய்திருக்கிறதாம் சிறுத்தைத் தலைமை. அதேபோல, வாரியப் பதவிகளுக்காக ஷா பிரமுகர், செல்வ மனிதர், திருப்பதி கடவுள் பெயர் கொண்டவர் ஆகியோரின் பெயர்களையும் சிபாரிசு செய்தார்களாம். ஆனால், இவர்கள் மூவருமே சூரியக் கட்சி அபிமானிகள் என்று சொல்லி அதற்கு முட்டுக்கட்டை போடுகிறாராம் விசில் கட்சியின் ‘குலுக்கல் மாப்பிள்ளை.’

SCROLL FOR NEXT