தமிழகம்

சிறுத்தைக் கட்சி ‘சீட்’ புயல் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

சிறுத்தைக் கட்சியில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த சிட்டிங் எம்எல்ஏ-வுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படாதது அந்தக் கட்சிக்குள் புயலைக் கிளப்பி இருக்கிறது. கடந்த 2021 தேர்தலிலேயே இவருக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் இருந்ததாம். சிறுத்தைக் கட்சியில் அப்போது கஜானா பொறுப்பில் இருந்த இன்னொரு சிறுபான்மை யினருக்கு சீட் கொடுக்கவே விரும்பியதாம் தலைமை.

இதைத் தெரிந்து கொண்ட சூரியக் கட்சி தலைமை இப்போது சீட் மறுக்கப்பட்டுள்ள சிறுபான்மை தலைவருக்கு அவரது சொந்த மாவட்டமான தென் கோடியிலேயே சூரியனில் சீட் கொடுக்க ஆயத்தமானதாம். இப்படி ஒரு திட்டம் இருப்பதை அறிந்தே சிறுத்தைத் தலைவர் அவருக்கே சீட்டை கொடுத்து சமாளித்தாராம்.

          

இந்த நிலையில், சிறுத்தைக் கட்சியில் எம்எல்ஏ-வாக இருந்து கொண்டு சூரியக் கட்சி எம்எல்ஏ போல் அந்தக் கட்சி வட்டாரத்தில் செல்வாக்குடன் வலம் வந்தாராம் இப்போது சீட் மறுக்கப்பட்ட எம் எல்ஏ. தலைவருடன் சூரியக் கட்சி தலைமை அலுவலகத்துக்குப் போனால்கூட தலைவரை விட்டுவிட்டு சூரியக் கட்சி தலைவர் களின் பின்னால் போய் நின்று கொள்வாராம்.

இதையெல்லாம் கணக்குப் போட்டே இம்முறை அவரை வேட்பாளர் பட்டியலில் சேர்க்காமல் தவிர்த்தாராம் சிறுத்தைத் தலைவர். இதை முன்கூட்டியே அறிவித்துவிட்டால் கடந்த முறையைப் போல சூரியக் கட்சியில் அவருக்கு சீட் கொடுக்க முயற்சிகள் நடக்கலாம் என்பதைத் ஊகித்தவர், சூரியக் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு முடித்த பிறகு தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை அறிவித்ததாராம் சிறுத்தைத் தலைவர்.

SCROLL FOR NEXT