தமிழகம்

சூரியக் கூட்டணியும் சீட் கணக்கும் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘சூரியக் கூட்டணி’யில் இந்த முறை பலரும் ‘அங்கீகாரம்’ என்ற ஆயுதத்தை எடுத்துப் போட்டு “எங்களுக்கு இத்தனை சீட் கூடுதலாக வேண்டும்” என கொக்கி போடுகிறார்களாம்.

இதனிடையே, தோழர் கட்சியில் ஒன்று சத்தமில்லாமல் நடிகர் கட்சி பக்கமும் ‘சம்பந்தம்’ பேசி வருவதாக கூட்டணி தலைமை துப்பறிந்துள்ளதாம்.

இந்த நிலையில், கூட்டணியை தக்கவைக்க இம்முறை, ‘சீறும்’ கட்சிக்கும் தோழர்களுக்கும் கூடுதல் சீட்களை ஒதுக்கும் ஆலோசனையில் இருக்கிறதாம் கூட்டணி தலைமை.

இவர்களுக்கு கூடுதலாக ஒரு சில தொகுதிகளைத் தந்துவிட்டு அதற்குப் பதிலாக ‘மலர்ச்சி’ கட்சியின் கணக்கில் கைவைக்கப் போகிறார்களாம். இதனால் அந்தக் கட்சியால் கூட்டணிக்குள் பிரளயம் வெடிக்காமல் இருக்க, கட்சியின் ‘பெரியவருக்கு’ ராஜ்ய சபா வாய்ப்பு என்று தேன் தடவப் போகிறார்களாம்.

இதையும் மீறி ‘மலர்ச்சி’ புது எழுச்சி என்று புறப்பட்டால், வாழ்த்தி வழியனுப்பி விடலாம் என்றும் சூரியக் கட்சி நிர்வாகிகள் தங்கள் தலைமைக்கு யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.

SCROLL FOR NEXT