தமிழகம்

‘ஜெயில்’ மாவட்ட சூரியக் கட்சி பஞ்சாயத்து | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘ஜெயில்’ மாவட்டத்தின் தலைநகர் தொகுதியின் சூரியக் கட்சி ‘கார்த்திகை’ எம்எல்ஏ மீது சொந்தக் கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட பிராதுகளாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநகராட்சியையும் சேர்த்தே ஆண்ட இவர், அஞ்சு, பத்தை மட்டும் கழகத்தினருக்கு ‘கட்டிங்’ போட்டுவிட்டு ‘பெரிய’ நோட்டுகளை எல்லாம் தனக்காக பக்கா பண்ணிவிட்டாராம்.

இதனால் ‘கார்த்திகை புள்ளி’ மீது சூரியக் கட்சியினரே செம சூடாக இருக்கிறார்கள். இதைத் தெரிந்து கொண்டு இம்முறை, “ரெண்டு தடவ நின்னு ஜெயிச்சாச்சு... மறுபடியும் நிக்கிறதுக்கு கையில ‘பசை’ இல்லை” என்று சொல்லி ஒதுங்கினாராம் திருவாளர் ‘கார்த்திகை’. ஆனால், ஆதரவாளர்கள் சிலர் அவரை கட்டி இழுத்துக் கொண்டுபோய் விருப்ப மனுவை தாக்க வைத்துவிட்டார்களாம்.

          

‘கார்த்திகை புள்ளி’ மீது கழகத்தினர் இப்படி ‘காண்டில்’ இருப்பது கழகத் தலைமைக்கும் தெரிந்து, “மொதல்ல கட்சிக்காரங்கள சரிபண்ற வழியப் பாருங்க” என அட்வைஸ் கொடுத்து அனுப்பியதாம். ஆனால், “மறுபடியும் இவரை நிறுத்துனா நாங்க வேலை பாக்குறதா இல்லை. அதுக்குப் பேசாம, தொகுதியை கூட்டணி மக்களுக்கு தள்ளிவிட்டுருங்க” என உடன்பிறப்புகள் உக்ரமாகப் பேசுகிறார்களாம்.

தனக்கு எதிராக சொந்தக் கட்சிக்குள்ளேயே ‘சோதனைகள்’ இருப்பதால் தன்னால் ஜெயில் மாநகரத்தின் வணக்கத்துக்குரியவராக அமர்த்தப்பட்ட பெண்மணியையும் பார்ட்டியில் விருப்ப மனு கொடுக்க வைத்திருக்கிறாராம் ‘கார்த்திகை புள்ளி’. அவரோ, தனக்கு மாத்திரமல்லாது, தன்னை ‘வளர்த்த’ கார்த்திகையாருக்கும் சேர்த்தே விருப்ப மனுவை தாக்கி இருக்கிறாராம்.

SCROLL FOR NEXT