பனையூர் கட்சியில் தேர்தலில் ‘பெரிய நோட்டு’ 10 வரைக்கும் செலவழிக்கும் தகுதியான நபர்கள் தமிழகம் முழுவதும் எத்தனை பேர் தேறுவார்கள் என எடக்கானவர் தரப்பில் இருந்து ஒரு சர்வே எடுத்தார்களாம்.
இன்றைய தேதியில் அப்படியான நபர்கள் அந்தக் கட்சியில் சுமார் 20 பேர் இருப்பதாக ரிசல்ட் கொடுத்தார்களாம். அதைப் பார்த்துவிட்டு, “இவ்வளவு பேர் தானா...” என்று சாதாரணமாகக் கேட்டுவிட்டு எளிதில் கடந்துவிட்டாராம் எடக்கானவர்.
இதனிடையே, பனையூர் பார்ட்டிக்கு முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் எல்லாம் வரப்போவதாகச் சொல்லி இருக்கும் தலைவர் ‘கோட்டையன்’ , இலைக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், பெயரோடு மலரைச் சேர்த்து வைத்திருக்கும் முன்னாள் பெண் அமைச்சர் என பலரிடமும் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டாராம்.
இந்த லிஸ்ட்டில், திராவிடக் கட்சிகளுக்காக இத்தனை காலமாக மேடைக்கு மேடை வசனம் பேசி வாடிக்கிடக்கும் ‘நாஞ்சில்’ புள்ளியையும் பனையூர் பக்கம் வளைத்து இழுக்க வண்டியைப் பிடித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாராம் தலைவர் ‘கோட்டையன்’.
இவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக வந்து விஜய்யுடன் கைகுலுக்க வைத்து டிரெண்டிங் உருவாக்க பக்கா பிளான் ரெடியாகிறதாம்.