தமிழகம்

கொலை செய்யப்பட்ட கனிமவள அதிகாரி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு - 'அமானுஷ்யம்' இருப்பதாக சமூக வலைதளங்களில் ரீல்ஸ்

செய்திப்பிரிவு

சென்னை: ப​தினெட்டு ஆண்​டு​களுக்கு முன்பு கொலை செய்​யப்​பட்ட கனிமவளத் துறை அதி​காரி​யின் வீட்​டில் ‘அமானுஷ்யம்’ இருப்​ப​தாக சமூக வலை​தளங்​களில் ரீல்ஸ் வெளி​யிடப்​பட்டு வரு​கிறது. இதையடுத்து அந்த வீட்​டுக்​குள் யாரும் நுழை​யாத​படி போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

சென்னை அசோக் நகர் நடேசன் நகரில் வசித்து வந்த ஓய்​வு​பெற்ற கனிமவளத் துறை அதி​காரி (டா​மின் தலை​வர்) சரவணன். அவரது மனைவி கஸ்​தூரி, வீட்டு வேலைக்​கார பெண் அன்​புக்​கரசி ஆகியோ​ர் கடந்த 2008-ல் கொலை செய்​யப்​பட்டனர்.

          

சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணை​நடத்தி சரவணனின் கார் ஓட்​டுநர் உட்பட 4 பேரை கைது செய்​தனர். கொலை நடந்து 18 ஆண்​டு​கள் ஆன நிலை​யில் கனிமவளத் துறை அதி​காரி சரவணன், மறைந்த முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆருடன் எடுத்​துக்​கொண்ட புகைப்​படங்​கள் மற்​றும் வீட்​டின் பொருட்​கள் சிதறிக் கிடப்​பதுடன், கார், வீடு, அனைத்​தும் பாழடைந்த நிலை​யில் உள்​ளன.

இதைக் கண்ட இளைஞர்​கள் சிலர் அந்த வீட்​டில் ‘அமானுஷ்யம்’ இருப்​ப​தாகக் கூறி அத்​து​மீறி, வீட்​டுக்​குள் நுழைந்து ரீல்ஸ் எடுத்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வரு​கின்​றனர்.

இந்த வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி பொது​மக்​கள் மத்​தி​யில் தேவையற்ற அச்​சத்​தை​யும், குழப்​பத்​தை​யும் ஏற்​படுத்தி வரு​கிறது. இதையடுத்​து, அந்த வீட்​டின் முன்பு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. வீட்டில் அத்துமீறி நுழைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என போலீஸ் அதி​காரி​கள் எச்​சரித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT