தமிழகம்

ஜெம் வீரமணியிடம் புழல் சிறையில் போலீஸார் மீண்டும் விசாரணை: மிரட்டி பணம் பறித்தவர்களின் பட்டியலை வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: ​போலீஸ் காவலில் விசா​ரிக்​கப்​பட்டு வரும் ஜெம் வீரமணி, தன்னை மிரட்டி பணம் பறித்​தவர்​களின் பட்​டியலை போலீ​ஸாரிடம் வழங்கி உள்​ளார்.

ஏழை சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி, அவரது உதவி​யாளர் சாந்​தி, கணவர் மகேந்​திர சிம்​மன், முன்​னாள் உதவி​யாளர் கணேசன் மற்​றும் கார் ஓட்​டுநர்​கள் 3 பேர் கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு காவல் கூடு​தல் ஆணை​யர் தேன்​மொழி தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட சிறப்பு புல​னாய்வு குழு நடத்​திய விசா​ரணை​யில், இது​வரை 10 சிறுமிகள் பாதிக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது.

இது தொடர்​பாக வீரமணி மீது இது​வரை 7 போக்சோ வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு 3 வழக்​கு​களில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். மேலும் குண்​டர் சட்​ட​மும் வீரமணி மீது பாய்ந்​துள்​ளது. முன்​ன​தாக வீரமணியை போலீ​ஸார் 3 நாள் காவலில் எடுத்து விசா​ரணை நடத்​தினர்.

அதன் அடிப்​படை​யில் மேலும் சிலரிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அதோடு போலீஸ் அதி​காரி​களிட​மும் சிறப்பு புல​னாய்வு அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வாக்​குமூலங்​களை பெற்​றனர்.

இந்​நிலை​யில், கூடு​தல் தகவல்​களை திரட்​டும் வகை​யில் வீரமணியை போலீ​ஸார் மேலும் 2 நாட்​கள் காவலில் எடுத்​துள்​ளனர்.

அவருக்கு 84 வயது ஆவதால், வயது முதுமை மற்​றும் பாது​காப்பு காரணங்​களை அடிப்​படை​யாக வைத்து புழல் சிறைக்கே சென்று சிறப்பு புல​னாய்வு குழு போலீ​ஸார் மீண்​டும் விசா​ரணை நடத்​தினர்.

இதில், அவர் மீதான பாலியல் குற்​றச்​சாட்டு மற்​றும் மிரட்டி பணம் பறித்​தவர்​கள் குறித்த முழு விவரத்​தை​யும் வீரமணி தெரி​வித்​துள்​ளார். அதை அடிப்​படை​யாக வைத்து போலீ​ஸார் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளனர்.

விசா​ரணை​ அறிக்கை

விசா​ரணை​யின் விவரம் தொடர்​பாக முதல் கட்ட அறிக்​கையை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள சிறப்பு புல​னாய்வு குழு போலீ​ஸார் வரும் 27-ம் தேதி அடுத்த கட்ட விசா​ரணை அறிக்​கையை தாக்​கல் செய்ய உள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

அக்​.29 வரை நீதி​மன்​றக் காவல்

ஜெம் வீரமணியை 4-வது பாலியல் வழக்​கில் போலீ​ஸார் கைது செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி எஸ்​.பத்மா முன்​பாக ஆஜர்​படுத்​தினர். அந்த வழக்​கில் அவரை வரும் அக்​.29 வரை நீதி​மன்​றக்​ காவலில்​ சிறை​யில்​ அடைக்​க நீதிப​தி உத்​தர​விட்​டுள்​ளார்​.

பிரகாஷின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஜெம் வீரமணிக்கு சொந்தமான சொத்துக்களை விற்கவும், பாலியல் வழக்கை மூடி மறைக்கவும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் மீது பதியப்பட்டுள்ள வழக்கில், அவருக்கு முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதேபோல ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி செம்பியம் தேவராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, அதை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT