மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அதற்கு நீதி கேட்டு காவலர் கோதண்டபாணி தலைமைச் செயலகம் எதிரே திமுக கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

 
தமிழகம்

மகளுக்கு நீதி கேட்டு தலைமைச் செயலக வாயிலில் திமுக கொடியை எரித்து காவலர் போராட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: மருத்​து​வர்​களின் தவறான சிகிச்​சை​யால் மகளின் பாதம் அகற்​றப்​பட்​ட​தாகக் கூறி, அதற்கு நீதி கேட்டு காவலர் ஒரு​வர் தலை​மைச் செயலக நுழைவு வாயி​லில் திமுக கொடியை எரித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.

திரு​வள்​ளூர் அடுத்த காக்​களூரை சேர்ந்​தவர் கோதண்​ட​பாணி (44), ஆவடி டேக்ங் பேக்​டரி காவல் நிலை​யத்​தில் தலை​மைக் காவல​ராக பணி​யாற்​றுகிறார். இவருக்கு மனைவி மற்​றும் 2 ஆண் மற்​றும் 13 வயதில் பிர​திக் ஷா என்ற மகள் உள்​ளார்.

          

பிர​திக் ஷாவுக்கு 3 வயது இருக்​கும்​போது திடீர் உடல் நலக்​குறைவு ஏற்​பட்​டது. இதையடுத்து, அவர் எழும்​பூர் குழந்​தைகள் நல அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். மேல் சிகிச்​சைக்​காக ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார்.

அங்கு சிறுமி​யின் காலின் பாதம் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்​டிய சூழல் ஏற்​பட்​டது. மருத்​து​வர்​களின் தவறான சிகிச்​சையே மகளுக்கு கால் பறி​போகக் காரணம் எனக்​கூறி, நீதி கேட்டு 5 ஆண்​டு​களாக தலை​மைக் காவலர் தொடர்ந்து போராடி வரு​கிறார்.

மருத்​து​வத் துறை அலு​வல​கம், டிஜிபி அலு​வல​கம், தலை​மைச் செயல​கம் எனப் பல இடங்​களில் முறை​யிட்​டும் அவரது கோரிக்கை இது​வரை நிறைவேற​வில்​லை. இந்​நிலை​யில், மகளுக்கு நீதி கேட்​டு, சீருடை​யில் தலை​மைச் செயலக நுழைவு வாயிலுக்கு நேற்று வந்த கோதண்​ட​பாணி, திமுக கொடியை எரித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.

மேலும், 2021-ம் ஆண்டு திமுக ஆட்​சிக் காலத்​தில்​தான் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்​கப்​பட்​ட​தாகக் கூறிய, மகளுக்கு நீதி கேட்டு கோஷமிட்​டார்.அங்கு பாது​காப்​புப் பணியி​லிருந்த போலீ​ஸார் உடனடி​யாக தீயை அணைத்து கோதண்​ட​பாணியை அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தினர்.

முன்​ன​தாக, தலை​மைக் காவலர் கோதண்​ட​பாணி கூறுகை​யில், “மகள் பிர​திக் ஷாவுக்கு 3 வயது இருக்​கும்​போது சிறுநீர் கழிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. இதையடுத்து, எழும்​பூர் குழந்​தைகள் நல அரசு மருத்​து​வ​மனை​யில் காண்​பித்​தேன்.

அப்போது, காலில் அரிப்​பும் ஏற்​படத் தொடங்​கியது. இது சாதாரண அரிப்​பு​தான் எனக் கூறி அலட்​சி​ய​மாக சில மருந்​துகளைக் கொடுத்து அனுப்பி வைத்​தனர். பின்​னர், 2 நாளில் மீண்​டும் காலில் அரிப்பு அதி​கரித்​தது.

வலது காலில் ரத்த ஓட்​டம் சரி​யாக இல்லை என கூறினர். இறு​தி​யில் அவர்​கள் அளித்த தவறான சிகிச்​சை​யால் மகளின் கால்​பாதத்தை அகற்​றும் நிலை ஏற்​பட்​டது. எனவே, இதில் சம்​பந்​தப்​பட்ட மருத்​து​வர்​கள் உட்பட அனை​வர் மீதும் நடவடிக்​கை எடுத்​து எனது மகளுக்​கு உரிய நீதி வழங்​க வேண்​டும்​” என்​றார்​.

SCROLL FOR NEXT