தமிழகம்

எந்த சூழலிலும் லஞ்சம் வாங்கக் கூடாது: போலீஸாருக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ், நேற்று முன்​தினம் ‘ஊழல் ஒழிப்பு தனிப்​பிரிவை’ சென்னை காவல்​துறை​யில் தொடங்​கி​னார்.

பொது​மக்​கள் லஞ்​சப் புகார்​களை ‘7871723000’ என்ற எண்​ணில் வாட்​ஸ்​அப் அல்​லது நேரடி​யாகத் தொடர்பு கொண்டு தெரிவிக்​கலாம் என்​றும், புகார் தருபவர்​களின் விவரங்​கள் ரகசி​ய​மாக வைக்​கப்​படும் என்​றும் அறி​வித்​தார்.

இதற்கு மக்​களிடையே பெரும் வரவேற்பு கிடைத்​தது. இந்​நிலை​யில், காவல் துறை​யினருக்​கும் அதி​காரி​களுக்​கும் முக்​கிய அறி​வுறுத்​தல்​களை காவல் ஆணை​யர் அமல்ராஜ் வழங்கியுள்ளார்.

அவர் தெரி​வித்​துள்​ள​தாவது: எந்​தவொரு சூழலிலும் நான் லஞ்சம் வாங்க மாட்​டேன். அதே​போல காவல் துறை​யில் யார் லஞ் ​சம் வாங்​கி​னாலும் அவர்களை தப்ப விட​மாட்​டேன்.

காவலர்​கள் யாரும் உயர் அதி​காரி​களைக் குளிரவிக்​கப் பணம் செலவு செய்​யத் தேவை​யில்​லை. எனக்​காக​வும் யாரும் எந்​த​விதத் தேவை​யில்​லாத செல​வு​களை​யும் செய்ய வேண்​டாம்.

காவல் நிலை​யத்துக்குப் புகாருடன் வருபவர்​களின் மனு​வில் உள்ள உண்​மைத் தன்​மையை மட்​டுமே பார்க்க வேண்​டுமே தவிர, அவர்​களின் பின்​னணி​யையோ, பண பலத்​தையோபார்க்​கக் கூடாது.

நமக்​குக் கொடுத்த பணியை நேர்​மை​யாகச் செய்​வோம். தவறு செய்​பவர்​களுக்கு நான் ஒரு​போதும் துணை நிற்​க​மாட்​டேன். நேர்​மை​யாகப் பணி​யாற்றி உங்​களை நீங்​களே நல்​வழிப்​படுத்​திக் கொள்​ளுங்​கள். இவ்​வாறு அவர் தெரிவித்​துள்ளார்.

SCROLL FOR NEXT