பாமக ஏம்எல்ஏ அருள்

 
தமிழகம்

“சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்ததில் விருப்பமில்லை” - பாமக எம்எல்ஏ அருள் அதிருப்தி

செய்திப்பிரிவு

பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலாவுடன் கூட்டணி அமைத்ததற்கு சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ-வான அருள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக கட்சிகள் தலைமையில் நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. இதில், அதிமுக கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி இடம் பெற்றுள்ளார். ராமதாஸ் தரப்பினர் அதிமுக, திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பின்னடைவை சந்தித்தனர்.

          

இந்நிலையில், சசிகலா பொதுச் செயலாளராக இருக்கும் புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு ராமதாஸ் ஆதரவு பாமக நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ-வான அருள், அன்புமணியை கடுமையாக எதிர்த்து வந்தார். ராமதாஸின் நம்பிக்கைக்கு உரியவராகவும், தீவிர ஆதரவாளராகவும் உள்ள அருள், சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்ததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அருள் கூறும்போது, “சட்டப்பேரவை தேர்தலில் சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதில் எனக்கோ, ஜி.கே.மணிக்கோ விருப்பமில்லை. கட்சியில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகளும் எங்களது கருத்தையே சார்ந்துள்ளனர். சசிகலாவுடன் வைத்துள்ள கூட்டணி குறித்து கட்சி மேலிடத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளேன். இருந்தாலும், பாமக நிறுவனர் ராமதாஸை விட்டு மாற்றுக் கட்சிக்கு செல்லும் எண்ணம் எனக்கில்லை. கடைசி வரை பாமக நிறுவனர் ராமதாஸூடன் இருப்பேன்” என்றார்.

SCROLL FOR NEXT