சென்னை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’, என்ற முழக்கத்துடன் தமிழகம் முழு வதும்சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறார். அந்தவகையில், அக்.12-ல் மதுரையில் தனது யாத்திரை தொடங்கினார்.
தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், ஜனவரி இறுதியில் நிறைவு செய்கிறார். அதன் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. யாத்திரை தொடக்க விழாவில் தேசிய தலைவர்கள் யாரும் பங்கேற்காத நிலையில்மோடியை பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.