விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நடத்தும், ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டார். உடன், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா தலைவர் ஆர்ஆர்.கோபால்ஜி, பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்ரி. | படம்: எம்.முத்துகணேஷ் |

 
தமிழகம்

இளைஞர்களின் புதிய சிந்தனைகள் உலகுக்கே வழிகாட்டும்: பள்ளி விழாவில் பிரதமர் மோடி நம்பிக்கை

மாணவர்களே நாட்டின் எதிர்கால நாயகர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: ​சென்​னை, மேற்கு மாம்​பலத்​தில் உள்ள ஜெய்​கோ​பால் கரோடியா இந்து வித்​யாலயா மெட்​ரி​குலேஷன் மேல்​நிலைப் பள்​ளி​யின் 50-வது ஆண்டு விழா நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்த விழா​வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்டு பொன்​விழா சிறப்பு மலரை வெளி​யிட்​டார். தொடர்ந்​து, பள்ளி வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) ஆய்​வகத்​தை​யும் பிரதமர் மோடி காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார்.

நிகழ்ச்​சி​யில் பிரதமர் பேசி​ய​தாவது: இன்​றைய இளைஞர்​கள் ‘வளர்ச்​சி​யடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடை​யும் தூண்​களாக மாற விரும்​பு​கிறார்​கள். அதற்​குத் தேவை​யான புதிய எண்​ணங்​கள் மற்​றும் தீர்​வு​களால் பாரதத்​தின் எதிர்​காலம் மட்​டுமின்​றி, உலகத்​தின் எதிர்​கால​மும் தீர்​மானிக்​கப்​படும்.

இன்று உலகம் பல பிரச்​சினை​களுக்கு தீர்​வு​களை தேடிக் கொண்​டிருக்​கிறது. அந்​தத் தீர்​வு​களை அளிக்​கும் ஆற்​றல் உங்​களிடம் உள்​ளது. இளைஞர்​களின் புதிய சிந்​தனை​களும் தீர்​வு​களும் உலகத்​துக்கே வழி​காட்​டும்.

இன்​றைய இளைஞர்​களுக்கு முன்பை விட அதிக வாய்ப்​பு​கள் உள்​ளன. 2014-ல் 750 ஆக இருந்த பல்​கலைக்​கழகங்​களின் எண்​ணிக்கை இன்று 1300-ஐ தாண்​டி​ உள்​ளது. கல்​லூரி​களின் எண்​ணிக்கை 38 ஆயிரத்​திலிருந்து 52 ஆயிரத்​துக்கு மேல் உயர்ந்​துள்​ளது.

‘கியூ எஸ்’ உலகத் தரவரிசை​யில் இந்​தி​யப் பல்​கலைக்​கழகங்​களின் எண்​ணிக்கை 14-ல் இருந்து 52 ஆக அதி​கரித்​துள்​ளது. விளை​யாட்​டுத் துறை​யிலும் பாரதம் பெரிய இலக்​கு​களை நோக்கி நகர்​கிறது. 2030 காமன்​வெல்த் போட்​டிகளை​யும், 2036 ஒலிம்​பிக் போட்​டிகளை​யும் இந்​தி​யா​வில் நடத்​து​வதற்​கான முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

உங்​கள் திறமை​யின் மீதும் தன்​னம்​பிக்​கை​யின் மீதும் எனக்கு முழு நம்​பிக்கை உள்​ளது. பாரதத்​தின் எதிர்​கால ‘நாயகர்​கள்’ நீங்​கள் தான். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் ஆளுநர் ஆர்​.​வி. அர்​லேகர், மத்​திய இணை அமைச்​சர் எல். முரு​கன், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், விஷ்வ ஹிந்து வித்யா கேந்​தி​ரா​வின் தலை​வர் ஆர்​.ஆர். கோபால்​ஜி, பொதுச் செய​லா​ளர் டாக்​டர் ஜி.​வி.கிரிஜா சேஷாத்ரி மற்​றும் பள்ளி மாணவர்​கள், ஆசிரியர்​கள் பங்​கேற்​றனர்.

பிரதமர் மன்​னிப்பு

விழா​வில் பங்​கேற்க சுமார் 1,000 மாணவர்​கள் காலை 10 மணிக்கே அழைத்து வரப்​பட்​டனர். ஆனால், பிரதமர் மோடி​யின் வருகை மாலை 3.45 மணி வரை தாமத​மான​தால் மாணவர்​கள் நீண்ட நேரம் காத்​திருக்​கும் சூழல் ஏற்​பட்​டது.

இதனால் சுமார் 8 மாணவர்​கள் மயங்கி விழுந்​தனர். இந்​நிலை​யில், மேடைக்கு வந்த பிரதமர் மோடி, தனது வருகை தாமத​மானதற்​கும், அதனால்​ மாணவர்​களுக்​கு ஏற்​பட்​ட அசவு​கரி​யத்​துக்​கும்​ மன்​னிப்​பு கோரி​னார்.

SCROLL FOR NEXT