ஜோலார்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் கல் இருந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே போலீஸார்.

 
தமிழகம்

தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கல்: ஜோலார்பேட்டை அருகே ரயிலை கவிழ்க்க சதி?

20 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்ட விரைவு ரயில்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் இருந்த கல்லால், விரைவு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயிலை கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் ஜோலார்பேட்டையைக் கடந்து கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் சுமார் 2 கிலோ எடையுள்ள கல் ஒன்று இருப்பதை இன்ஜின் ஓட்டுநர் பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, உடனடியாக ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் தண்டவாளத்தில் கிடந்த கல்லை அகற்றினர். இதனால், 20 நிமிடங்கள் தாமதத்துக்குப் பிறகு விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.

தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி நடந்ததா என்ற கோணத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரை பிடித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT