தமிழகம்

மீன்பிடி தடை கால நிவாரணத்தை உயர்த்த நீதிமன்றத்தில் வழக்கு

செய்திப்பிரிவு

மதுரை: ராம​நாத​புரத்தைச் சேர்ந்த தீரன் திரு​முரு​கன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் ஆந்​திரா, கோவா, மேற்​கு​வங்கம் போல மீன்​பிடி தடைக் கால நிவாரணமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிப​தி​கள் கார்த்​திகேயன், சக்​திவேல் அமர்வு நிவாரண நிதியை உயர்த்​து​வது அரசின் கொள்கை முடிவு. ரூ.20 ஆயிர​மாக உயர்த்​து​வது குறித்து அடுத்த தடைக் காலத்​துக்​குள்​ அரசு உரிய முடி​வெடுக்​க வேண்​டும்​ என உத்​தரவிட்​டனர்​.

SCROLL FOR NEXT