மதுரை: தமிழகத் தேர்தலில் வாக்களித்த இலங்கை குடியுரிமை பெற்றவர் இலங்கைக்குச் செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களித்த இலங்கை குடியுரிமை பெற்ற ஜெய ஆனந்தன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் இலங்கை செல்ல அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கெளரி விசாரித்தார். பின்னர், இந்திய குடியுரிமை என்ற அடிப்படைத் தகுதி இல்லாத ஒருவரின் பெயர் தேர்தலில்இடம் பெற்றிருப்பது வாக்களிக் கும் உரிமையை தராது.
ஒருவர் வெளிநாடு செல்வது தனிநபர் சுதந்திரத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவர் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதால் அந்த உரிமையைச் சட்டப்படி கட்டுப்படுத்த முடியும். எனவே மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.