தமிழகம்

வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை மாமல்லபுரம் ‘ரிசார்ட்'டில் பாதுகாக்க திட்டம்: நிர்வாகிகள் ரகசிய ஏற்பாடு

குதிரை பேரத்தை தடுக்க விஜய் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: இன்று வெளி​யாகும் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு தனது கட்சி எம்​எல்​ஏ-க்​களை பாது​காக்க மாமல்​லபுரத்​தில் ரகசிய ஏற்​பாடு​களை தவெக செய்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான வாக்கு எண்​ணிக்கை இன்று நடக்​கிறது. இந்த தேர்​தலில் 233 தொகு​தி​களில் விஜய்​யின் தவெக தனித்​துப் போட்​டி​யிடு​கிறது. எடப்​பாடி தொகு​தி​யில் மட்​டும் சுயேச்சை வேட்​பாள​ருக்கு ஆதரவு அளித்​துள்​ளது. தேர்​தலுக்கு பிந்​தைய பெரும்​பாலான கருத்​துக்​கணிப்பு முடிவு​கள் திமுக​வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்​ப​தாக தெரி​வித்​துள்​ளன.

இருப்​பினும் விஜய் தரப்​போ, தவெக வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடிக்​கும் என பெரிதும் நம்​பு​கிறது. இதனிடையே, சில தொகு​தி​களில் வெற்றி பெறும் தவெக வேட்​பாளர்​களை குதிரை பேரத்​தின் அடிப்​படை​யில் இழுக்க திமுக, அதி​முக முயற்சி செய்​ய​லாம் என விஜய்க்கு தகவல் கிடைத்​த​தாக கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, 2 நாட்​களுக்கு முன்பு கட்​சி​யின் வேட்​பாளர்​களு​டன் ஆலோ​சனை நடத்​திய விஜய், ‘வெற்றி பெற்​றதும் வேறு எங்​கும் செல்​லாமல் எந்​நேர​மாக இருந்​தா​லும் பனையூருக்கு வந்​து​வுிட வேண்​டும். உங்​களுக்​காக நான் காத்​திருப்​பேன்’ என அறி​வுறுத்​தி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், மாமல்​லபுரம் அருகே பூஞ்​சேரி​யில் உள்ள ஒரு தனி​யார் விடு​தியை தவெக​வினர் தயார் செய்து வைத்​துள்ள தகவல் கசிந்​துள்​ளது. வெற்றி பெறும் வேட்​பாளர்​களை அங்கு தங்க வைக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்து தவெக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தேர்​தல் முடிவு​கள் எங்​களுக்கு சாதக​மாகவே இருக்​கும். எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்த முறை வாக்கு சதவீதம் உயர்ந்து இருப்​பதே இதற்கு சாட்​சி. எனவே​தான் தவெக ஆட்​சி​யமைக்​கும் என விஜய் நம்​பு​கிறார். அதே​நேரத்​தில், தொங்கு சட்​டப்​பேரவை அமை​யும் பட்​சத்​தில் திமுக மற்​றும் அதி​முக எங்​களது வேட்​பாளர்​களைக் குதிரை பேரம் மூலம் இழுக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வந்​துள்​ளது.

ஏற்​கெனவே எடப்​பாடி​யில் தவெக போட்​டி​யிட முடி​யாத​படி சதி செய்​தார்​கள். அதற்கு சுயேச்​சையை ஆதரித்து விஜய் பதிலடி கொடுத்​தார். தற்​போது தேர்​தல் முடிவு​களுக்​குப் பின் நடக்​கக்​கூடிய குதிரை பேர அரசி​யலை முறியடிக்க தெளி​வான திட்​டத்தை விஜய் வகுத்​திருக்​கிறார்.

அதன்​படி, வெற்றி பெற்ற எம்​எல்​ஏ-க்​களை பாது​காப்​பாக வைக்க பூஞ்​சேரி​யில் உள்ள தனி​யார் விடு​தி​யில் 100 பேர் தங்​கும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. வேட்​பாளர்​களை சிதறாமல் அந்த இடத்​துக்கு அழைத்து வரும் முக்​கிய பொறுப்பை ஆதவ் அர்​ஜு​னா​விடம் விஜய் ஒப்​படைத்​துள்​ளார். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரிவித்​தன.

SCROLL FOR NEXT