தமிழகம்

9 வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் நிறைவேற்றம்: பியூஷ் கோயல் பெருமிதம்

செய்திப்பிரிவு

கோவை: கடந்த மூன்​றரை ஆண்​டு​களில் 9 வரி​யில்லா வர்த்தக ஒப்​பந்​தங்கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளதாக மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​தார். கோவை​யில் தொழில் துறை அமைப்​பினர், இளம் தொழில்​முனை​வோர் மற்​றும் ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​களு​டன் கலந்​துரை​யாடல் கூட்​டம் நேற்று நடந்​தது.

இதில் சிறப்பு விருந்தின​ராக பங்​கேற்ற மத்​திய தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல்பேசி​ய​தாவது: ஒருங்​கிணைந்த இந்​தி​யா​வின் வளர்ச்​சியை பிரதமர் மோடி முன்​னெடுக்​கிறார்.

          

கோவையை எப்​போதும் தமிழகத்​தின் தொழில் வளர்ச்​சிக்​கான அடை​யாள​மாகவே கருதுகிறார். குறிப்​பாக, பொறி​யியல் மற்​றும் ஜவுளித் துறை​யில் கோவை​யின் பாரம்​பரிய​மான பலத்​துடன், தற்​போது பாது​காப்​புத் துறை, விண்​வெளி ஆராய்ச்சி மற்​றும் புதிய தலை​முறை ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​களும் இணைந்து நகரை வளர்த்து வரு​கின்​றன.

கோவை​யின் பொருளா​தார முது​கெலும்​பாக திகழும் 15 லட்​சம் குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​களின் பங்​களிப்பு பாராட்​டத்​தக்​கது. இத்​த கைய நிறு​வனங்​களின் துணிச்​சலான முதலீடு​ம், புதிய கண்டுபிடிப்​பு​களுமே உலக அரங்​கில் இந்​தி​யாவை நிலைநிறுத்துகிறது.

நாட்​டில் 2014-ம் ஆண்​டுக்கு முந்​தைய மின் தட்​டுப்​பாடு​கள் தற்​போது களை​யப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் காற்​றாலை மற்​றும் சூரிய ஒளி மூலம் உற்​பத்தி செய்​யப்​படும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தி, தேசிய மின் தொகுப்பு வழி​யாக மற்ற பகு​தி​களுக்கும் கொண்டு செல்​லப்​பட்டு சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது.

‘டிஜிட்​டல் மயமாக்​கல்’ இந்​தி​யா​வின் பெரிய புரட்​சி. கிராமங்​களில் கூட குறை​வான விலை​யில் 5 ஜி சேவை கிடைக்​கிறது. இணை​யச் சேவையை இந்​தி​யா​வில் பல கோடி பேர் பயன்​படுத்​துகிறார்​கள். சாட் ஜிபிடி பயன்​படுத்​துதலில் உலக நாடு​களில் இந்​தியா 2-ம் இடத்​தில் உள்​ளது.

உலகின் மிகப்​பெரிய பொருளா​தார நாடாக இந்​தியா வளர்ந்து வரு​கிறது. பல்​வேறு வரி குளறு​படிகளுக்கு மத்​தி​யில் ஜிஎஸ்டி தீர்​வாக அமைந்​துள்​ளது. கடந்த மூன்​றரை ஆண்​டு​களில் தொழில்​ விரி​வாக்​கத்துக்கு பயன்படும்வகையில் 9 வரி​யில்லா வர்த்தக ஒப்​பந்​தம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன.

ஒவ்​வொரு இந்​தி​யரும் நேர்​மை​யான, பொறுப்​புணர்வு உள்ள அரசை எதிர்​பார்க்​கிறார்​கள். 23-ம் தேதி நடை​பெறும் தேர்​தலில், ஒட்​டுமொத்த தமிழ்​நாட்டு மக்​களும் வளர்ச்​சிக்​கான அரசை தேர்வு செய்ய வேண்டும்.

சுதந்​திர​மான, மத்​திய அரசின் திட்​டங்​களை முழு​மை​யாக உள்​ளாட்சி வரை பயன்​படுத்தி 2047-ம் ஆண்டு நாட்​டின் ஒட்​டுமொத்த வளர்ச்​சிக்​கான பங்​களிப்​பில் தமிழ்​நாடும் இடம்​பெற வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். கூட்​டத்​தில் தொழில்​துறை​யினர் 200-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்.

தொடர்ந்து பல்​வேறு தொழில் அமைப்​பு​களின் 40 கேள்வி​கள் அடங்​கிய தொகுப்பை அமைச்​சர் பெற்​றுக்​கொண்​டார். வரி​யில்லா வர்த்தக ஒப்​பந்​தத்​தில் தெளி​வான விளக்​கங்​கள் தர வலி​யுறுத்​தப்​பட்​டது.

நிகழ்​வில் பங்​கேற்ற இளம்​பெண் ஒரு​வர், உயர் கல்​வித்​துறை​யில் இந்​தியா போ​திய வளர்ச்​சியை எட்​டாதது ஏன் என கேள்வி எழுப்​பி​னார். இது தொடர்​பாக நடவடிக்​கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர்​ பதிலளித்தார்​.

SCROLL FOR NEXT