தவெக தலைவர் விஜய்
புதுடெல்லி: தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியில் குதிரை பேர முறைகேடு புகார்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி நடத்தப்பட்ட தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற செய்யும் வகையில் ஆதரவளித்த கட்சிகளுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு தொகையும், 1000 கோடி ரூபாய் அளவுக்கு அரசு ஒப்பந்தங்களுக்கான உறுதியும் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக முறையில் நடைபெறவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
மேலும் அமுமுக எம்எல்ஏ காமராஜும், எஸ் பி வேலுமணி தலைமையிலான பிரிவினரும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதுபோன்ற குதிரைபேர புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிபிஐ விசாரித்து முடிக்கும் வரை குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.