தமிழகம்

சென்னை விமான நிலையத்தின் 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்: மத்திய அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரி​வாக்​கப் பணிகள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது என்று மத்​திய விமானப் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் முரளிதர மகாலி தெரி​வித்​தார்.

சென்னை விமான நிலை​யத்​தின் விரி​வாக்கப் பணி​கள் 2 கட்​டங்​களாக நடை​பெற்று வரு​கின்றன. முதல்​கட்ட பணி​கள் கடந்த 2023-ம் ஆண்டு நிறைவடைந்​த​தால், ஆண்​டுக்கு 2.3 கோடி பயணி​களை கையாளும் புதிய முனை​யம் திறக்​கப்​பட்​டது.

இரண்​டாம் கட்​ட​மாக ஆண்​டுக்கு 3.5 கோடி பயணி​களை கையாளும் திறன் கொண்ட உள்​கட்​டமைப்பை உரு​வாகும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

நாடாளு​மன்​றத்​தில்..

இதுதொடர்​பாக நாடாளு​மன்​றத்​தில் திமுக எம்​.பி.க்​கள் தயாநி​தி​மாறன், வில்​சன் ஆகியோர் எழுப்​பிய கேள்வி​களுக்கு பதிலளி்த்து மத்​திய விமான போக்​கு​வரத்துத்​துறை அமைச்​சர் முரளிதர மகாலி கூறிய​தாவது: கடந்த 5 ஆண்​டு​களில் சென்னை விமான நிலைய உள்​கட்​டமைப்​புக்​காக சுமார் ரூ.236.75 கோடி செல​விடப்​பட்​டுள்​ளது.

சென்னை விமான நிலை​யத்​தில் விமானங்​களுக்​கான நேர ஒதுக்​கீட்​டில் எந்த தட்​டுப்​பாடும் இல்​லை. 2022-23-ம் ஆண்டு முதல் பயணி​கள் போக்​கு​வரத்​தின் அடிப்​படை​யில் சென்னை விமான நிலை​யம் தொடர்ந்து நாட்​டின் 5-வது பரபரப்​பான விமான நிலை​ய​மாக உள்​ளது.

இந்த விமான நிலை​யத்​தில் இரண்​டாம் கட்ட பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்றன. திருச்சி விமான நிலை​யத்​தில் ரூ.80 கோடி செல​வில் கட்​டப்​படும் புதிய ஏடிசி கோபுரம் மற்​றும் தொழில்​நுட்ப பகுதி பணி​கள் 76 சதவீதம் முடிந்​து​விட்​டன.

கோவை விமான நிலை​யத்​தில் புதி​தாக கையகப்​படுத்​தப்​பட்ட நிலத்தைச் சுற்றி ரூ.51 கோடி மதிப்​பில் எல்லைச் சுவர் கட்​டும் பணி​யும், ஏற்​கெனவே உள்ள முனைய கட்​டிடத்​தில் ரூ.14 கோடி செல​வில் மாற்​றங்​கள் செய்​யும் பணி​யும் தொடங்கி நடை​பெற்று வரு​கின்றன. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT