உயர் நீதிமன்றம், மதுரை. 
தமிழகம்

பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

சிபிசிஐடி போலீஸாரே விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: பழநி கோயிலுக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி நில மோசடி வழக்கை சிபிஐ விசா​ரணை கோரி திமுக, அதி​முக மற்​றும் அறக்​கட்​டளை நிர்​வாகி தாக்​கல் செய்த மனுக்​களை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

பழநி முரு​கன் கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலம் தனி​நபர்​கள் பெயருக்கு மோசடி​யாக பத்​திரப்பதிவு செய்​யப்​பட்​டது தொடர் பாக சார் பதி​வாளர் ஜஸ்டின் மணி​கண்​டன் உள்பட பலர் மீது சிபிசிஐடி போலீ​ஸார் வழக்குப்பதிவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக்​கோரி பழநி அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ வேணுகோ​பால், தண்​டா​யுத​பாணி சுவாமிகள் மடத்​தின் அறங்காவலர் அன்​னபூரணி சிவக்​கு​மார், திமுகவைச் சேர்ந்த பழநிநகராட்​சித் தலை​வர் உமா மகேஸ்​வரி ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்​தாக்​கல் செய்​தனர்.

மனுக்​களை நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், ஆர்​.சக்​திவேல் அமர்வு விசா​ரித்​தது. மனு​தா​ரர்​கள் தரப்​பில், நிலத்​தின் மதிப்பு ரூ.2 கோடி என குறைத்து காட்​டப்​பட்​டுள்​ளது. கோயில் நிலம் பதிவு தொடர்​பாக தனி நீதிபதி ஏப்​.10-ல் உத்​தர​விட்​டுள்​ளார். அந்த உத்​தரவை எதிர்த்து கோயில் நிர்​வாகம் சார்​பில் ஜூலை 3 வரை மேல்​முறையீடு செய்​ய​வில்​லை.

பத்​திரப்​ப​தி​வில் தவறு நடந்​துள்​ள​தாக ஊடகங்​களில் அமைச்​சர் கருத்து தெரி​வித்​துள்​ளார். நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்ட பிறகே கைது நடவடிக்​கைகள் தொடங்​கப்​பட்​டன. இந்த மோசடி​யின்பின்​னால் பலர் உள்​ளனர். எனவே விசா​ரணையை சிபிஐக்கு மாற்ற வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டது.

கோயில் நிர்​வாகம் தரப்​பில், சிபிசிஐடி விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு வழங்​கப்​படு​கிறது. அந்த நிலத்தை பத்​திரப்​ப​திவு செய்ய வேண்​டாம் என பதிவுத் ​துறைக்கு கோயில் நிர்​வாகம் தரப்​பில் கடிதம் அளிக்​கப்​பட்​டுள்​ளது எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

அரசுத் தரப்​பில், பத்​திரப்​ப​திவு மோசடி தொடர்​பாக ஜூலை 13-ல் பழநி அடி​வாரம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர். பின்​னர் விசா​ரணை சிபிசிஐடிக்கு மாற்​றப்​பட்​டது. இந்த மனுக்​கள் அரசி​யல் நோக்​கத்​துக்​காக தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இவற்றை பொது நல மனுக்​கள் என்ற அடிப்​படை​யில் விசா​ரிக்க முடி​யாது. மனுக்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும் எனக் கோரப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: பழநி கோயில் நில மோசடி வழக்கை சிபிசிஐடி விசா​ரித்து வரு​கிறது. 6 மாவட்​டங்​களில் சிறப்பு குழுக்​கள் மூலம் 16 இடங்​களில் சோதனை நடத்தி 207 ஆவணங்​கள், 12 செல்​போன்​கள், 3 மடிக்​கணினிகள், 8 பிற மின்​னணு சாதனங்​களை பறி​முதல் செய்​துள்​ளனர். தற்​போது வரை 115 சாட்​சிகளிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டுள்​ளது. பதிவுத் ​துறை, வரு​வாய்த்​துறை, வங்கி தொடர்​பான பதிவு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. அவற்றை விரி​வாக ஆய்வு செய்ய வேண்​டியுள்​ளது. சிசிடிவி காட்​சிகளும் சேகரிக்​கப்​பட்​டுள்​ளன.

வழக்கு விசா​ரணையை ஒரு அமைப்​பில் இருந்து மற்​றொரு அமைப்​புக்கு மாற்​றும்​போது குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​களுக்கு எதி​ராக முகாந்​திரம் இருப்​பதை பதிவு செய்ய வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே தெரி​வித்​துள்​ளது.

மேலும், குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் உண்​மை​யில் குற்​றம் செய்​தா​ரா, இல்​லையா என்​பதைக் கண்​டறிய சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும் என நீதி​மன்​றம் நேரடி​யாக உத்​தர​விட முடி​யாது என்​றும் உச்ச நீதி​மன்​றம் கூறி​யுள்​ளது. வெறும் சந்​தேகம் அல்​லது யூகத்​தின் அடிப்​படை​யில் விசா​ரணையை வேறு அமைப்​புக்கு மாற்ற முடி​யாது. மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​படு​கின்றன. சிபிசிஐடி தொடர்ந்து விசா​ரணை நடத்த வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் கூறியுள்​ளனர்.

SCROLL FOR NEXT