தமிழகம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்த்து உள்ளாட்சி தேர்தலையும் நடத்த கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தலுடன் சேர்த்து உள்​ளாட்​சித் தேர்​தலை​யும் நடத்​தக்​கோரி தொடரப்​பட்ட மனு வாபஸ் பெறப்​பட்​ட​தால், வழக்கை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திரு​வள்​ளூரைச் சேர்ந்த வழக்​கறிஞர் சிவகுமரன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “தமிழகத்​தில் 27 மாவட்​டங்​களில் ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​கான பதவிக்​காலம் கடந்த ஜனவரி​யுடன் முடிவடைந்து விட்​டது. எஞ்​சிய மாவட்​டங்​களின் பதவிக்​காலம் விரை​வில் முடிவடைய​வுள்​ளது. இந்​நிலை​யில் தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுடன் உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​கான தேர்​தலை​யும் சேர்த்து நடத்​து​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகளை ஆராய்ந்​து, உள்​ளாட்சி தேர்​தலை​யும் அறிவிக்க உத்​தர​விட வேண்​டும்.

          

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுடன் சேர்த்து உள்​ளாட்சி தேர்​தலை​யும் நடத்​தி​னால் அரசுக்கு தேர்​தல் செலவு வெகு​வாகக் குறை​யும். அதி​காரி​களின் தேவை மற்​றும் நேர​மும் மிச்​சப்​படும். வாக்​காளர்​களும் தகு​தி​யானவர்​களை ஒரே நேரத்​தில் தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்​படும். ஒரே நாடு ஒரே தேர்​தல் திட்​டத்தை செயல்​படுத்த மத்​திய அரசு நடவடிக்கை எடுத்​து​வரும் நிலை​யில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுடன், உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​கான தேர்​தலை​யும் சேர்த்து நடத்த உத்​தர​விட வேண்டும்” என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், “ஏற்​கெனவே தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அறிவிக்​கப்​பட்டு விட்​டதே” என்​றனர். அதற்கு மனு​தா​ரர் தரப்​பில், “இனிவரும் காலங்​களில் இது​போல தேர்​தல்​களை ஒன்​றாக நடத்த முயற்​சிக்​கலாம்” என தெரிவிக்​கப்​பட்​டது.

“அடுத்த 5 ஆண்​டு​களுக்​குப் பிறகு என்ன நடக்​கும் என்​பதை இப்​போதே கணிக்க முடி​யாது” எனக் கூறிய நீதிப​தி​கள், இது தொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்தை நாட உத்​தர​விட்​டனர். அதையடுத்து மனு​தா​ரர் தரப்​பில் இந்த வழக்கை வாபஸ் பெற்​றுக்​கொள்​வ​தாக தெரி​வித்​ததையடுத்​து, அதையேற்ற நீதிப​தி​கள் வழக்கை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT