படம்: ர.செல்வமுத்துகுமார்

 
தமிழகம்

விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

மனை​விக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்​தாரா என சந்​தேகம்

செய்திப்பிரிவு

சென்னை: விஜய் தனது மனைவி சங்​கீ​தாவுக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்​த​தாக வேட்​புமனு​வில் கூறி​யிருப்​பதை ஆய்வு செய்​யக் கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு என 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டுள்​ளார். இந்த நிலை​யில், 2 தொகு​தி​களி​லும் அவர் தாக்​கல் செய்​துள்ள வேட்​புமனுக்​களில் பல்​வேறு முரண்​பாடு​கள் உள்ளன என்​றும், பெரம்​பூர் தொகுதி வேட்​புமனு​வில் தனது சொத்து மதிப்பை ரூ.100 கோடி வரை குறைத்​துக் காட்​டி​யுள்​ளார் என்​றும் கூறி பெரம்​பூர் தொகுதி வாக்​காள​ரான வியாசர்​பாடி விக்​னேஷ் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கு விசா​ரணை ஜூன் மாதத்​துக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது.

இதற்​கிடையே, விஜய்​யின் வேட்​புமனு தொடர்​பாக பெரம்​பூர் தொகு​தி​யின் மற்​றொரு வாக்​காளர் வெங்​கடேஷ் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்​தார். அதில் கூறி​யிருந்​த​தாவது: விஜய் தனது மனைவி சங்​கீ​தாவுக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்​துள்​ள​தாக வேட்​புமனு​வில் குறிப்​பிட்​டுள்​ளார். விவாகரத்து கோரி சங்​கீதா வழக்கு தொடர்ந்​துள்ள நிலை​யில், அவருக்கு கடன் கொடுத்​த​தாக விஜய் கூறி​யிருப்​பது சந்​தேகத்தை ஏற்​படுத்​துகிறது.

அதே​போல, தனி​யார் கல்வி அறக்​கட்​டளைக்கு ரூ.20 கோடி நிதி வழங்​கி​யிருப்​ப​தாக வேட்​புமனு​வில் கூறி​யிருப்​பது குறித்​தும் விஜய் விளக்​கம் அளிக்​க​வில்​லை. வேட்​புமனு​வில் உண்மை விவரங்​களை மறைப்​பது தேர்​தல் விதி​மீறல் மட்​டுமின்றி சட்ட விரோத​மும்​கூட. எனவே, விஜய்​யின் வேட்​புமனுவை ஆய்வு செய்ய வரு​மான வரித் துறைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அதில் கோரி​யிருந்​தார்.

தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்வு இந்த மனுவை விசா​ரி்த்​தது. இதே கோரிக்​கை​யுடன் ஏற்​கெனவே ஒரு வழக்கு தொடரப்​பட்​டுள்​ள​தால், இதை வி​சா​ரணைக்கு ஏற்க முடி​யாது என்று மறுப்பு தெரி​வித்து வழக்கை தள்​ளு​படி செய்​து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT