தமிழகம்

ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: நெல்லை விரைவு ரயி​லில் ரூ.4 கோடி பணம் பிடிபட்ட விவ​காரத்​தில் நயி​னார் நாகேந்​திரன் மற்​றும் கேசவ விநாயகம் மீது வழக்​குப்​ப​திய அமலாக்​கத் துறைக்கு உத்​தர​விடக்​கோரி திமுக எம்​.பி. கிரி​ராஜன் தொடர்ந்த வழக்கை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2024-ம் ஆண்டு நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தலின்​போது நெல்லை விரைவு ரயி​லில் கொண்டு செல்​லப்​பட்ட ரூ.4 கோடி பணத்தை பறக்​கும்​படை அதி​காரி​கள் தாம்​பரம் ரயில் நிலை​யத்​தில் பறி​முதல் செய்​தனர்.

இந்த பணம் நெல்லை தொகுதி​யில் பாஜக வேட்​பாள​ராக போட்​டி​யிட்ட பாஜக மாநில தலை​வ​ரான நயி​னார் நாகேந்​திரனுக்கு ஆதர​வாக அத்​தொகுதி வாக்​காளர்​களுக்கு விநி​யோகிப்​ப​தற்​காக கொண்டு செல்​லப்​பட்​ட​தாக கூறப்​பட்​டது.

இது தொடர்​பாக சிபிசிஐடி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரும் நிலை​யில், பாஜக மாநிலத் தலை​வ​ரான நயி​னார் நாகேந்​திரன் மற்​றும் பாஜக முன்​னாள் அமைப்​புச்செய​லா​ள​ரான கேசவ விநாயகம் மீது சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச்​சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்த அமலாக்​கத் துறைக்​கும் உத்​தர​விடக்​கோரி திமுக எம்​.பி. ஆர்​.கிரி​ராஜன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அமலாக்​கத் துறை தரப்​பில் ஆஜரான சிறப்பு வழக்​கறிஞர் என்​.ரமேஷ், இந்த விவ​காரத்​தி்ல் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்ய வேண்​டுமென அமலாக்​கத் துறைக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட முடி​யாது.

யார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்​டுமென்​பதை அதி​காரி​கள்தான் முடிவு எடுக்க முடி​யும் என்​றார். அதைப்​ப​திவு செய்து கொண்ட நீதிப​தி​கள், தி​முக எம்​.பி. கிரி​ராஜன் தாக்​கல் செய்​த மனுவை தள்ளு​படி செய்​து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT