தமிழகம்

பிரதமர் மோடி குறித்து அவதூறு: அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் அமர்வில் மனு தாக்கல்

செய்திப்பிரிவு

மதுரை: பாஜக தூத்​துக்​குடி மாவட்ட வழக்​கறிஞர் அணித் தலை​வர் நீதி​பாண்​டியன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: அமைச்சர் மனோ தங்​க​ராஜ், தனது முகநூல் பக்​கத்​தில், எப்​ஸ்​டீன் கோப்​பு​களில் பிரதமர் மோடி இடம் பெற்​றிருப்​ப​தாக வீடியோ பதி​விட்​டுள்​ளார்.

அது போலி​யானது என பல்​வேறு உண்மை கண்​டறி​யும் நிறு​வனங்​கள் கூறி​யுள்​ளன. எனினும், பிரதமர் மோடியின் பெயருக்கு களங்​கம் ஏற்​படுத்​தும் நோக்​கில், போலி​யான வீடியோவை அமைச்​சர் முகநூல் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.

          

அமைச்​சரின் முகநூல் பதிவு சில நிமிடங்​களில் பல லட்​சம் பார்​வை​யாளர்​களை சென்​றடைந்​துள்​ளது. இதனால் சமூக ஒற்​றுமைக்​கும், பொது அமை​திக்​கும் ஈடு செய்ய முடி​யாத இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

அமைச்​சரின் இந்த நடவடிக்கை பிஎன்​எஸ் சட்​டப்​படி 2 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை விதிக்​கக்​கூடிய குற்​ற​மாகும். இது தொடர்​பாக அமைச்​சர் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி கோவில்​பட்டி காவல் நிலை​யத்​தில் கடந்த 11-ம் தேதி புகார் அளித்​தேன்.

போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​ய​வில்​லை. எனவே, எனது புகாரின் பேரில் அமைச்​சர் மனோதங்​க​ராஜ் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிபதி எஸ்​.ஸ்ரீமதி முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி, “மனு தொடர்​பாக கோவில்​பட்டி காவல் ஆய்​வாளர் பதில் அளிக்க வேண்​டும். விசா​ரணை மார்ச் 12-க்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT