தமிழகம்

கோயில் நிலத்துக்கு குத்தகை வாடகை பாக்கி ரூ.9.74 கோடியை செலுத்த மறுத்து அம்ருதாஞ்சன் நிறுவனம் தாக்கல்​ செய்த மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: கபாலீஸ்​வரர் கோயில் நிலத்​துக்​கான குத்​தகை வாடகை பாக்கி ரூ.9.74 கோடியை செலுத்த மறுத்து அம்​ரு​தாஞ்​சன் நிறு​வனம் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை மயி​லாப்​பூர் லஸ் சர்ச் சாலை பகு​தி​யில் கபாலீஸ்​வரர் கோயிலுக்கு சொந்​த​மான 14 கிர​வுண்ட் நிலத்தை தலை​வலி நிவாரண தைலம் தயாரிப்​பில் பிரபல​மான அம்​ரு​தாஞ்​சன் நிறு​வனம் கடந்த 1901-ல் மாதம் ரூ.1400 என்ற வாடகை அடிப்​படை​யில் 99 ஆண்​டு​களுக்கு குத்​தகை அடிப்​படை​யில் பெற்​றிருந்​தது.

          

இந்த குத்​தகை காலம் முடிவடைந்த நிலை​யில் இந்த மாத வாடகையை அறநிலை​யத் துறை ரூ.3.3 லட்​ச​மாக நிர்​ண​யம் செய்து கடந்த 2001-ல் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து அம்​ரு​தாஞ்​சன் நிறு​வனம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 2005-ல் வழக்கு தொடர்ந்​தது.

அந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி கடந்​தாண்டு பிறப்​பித்த உத்​தர​வில், “அந்த நிறு​வனம் செலுத்த வேண்​டிய வாடகை பாக்​கியை வசூலிக்க அறநிலை​யத் துறை அதி​காரி​கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என உத்​தர​விட்​டார்.

இதை எதிர்த்து அம்​ரு​தாஞ்​சன் நிறு​வனம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது அறநிலை​யத் துறை தரப்​பில் சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ஆர்​.ஆர்​. அருண் நடராஜன் ஆஜராகி, “மனு​தா​ரர் நிறு​வனத்​திட​மிருந்து 2018-ம் ஆண்டு கோயில் நிலம் மீட்​கப்​பட்​டு​விட்​டது. கடந்த 2018-ம் ஆண்டு வரை அந்த நிறு​வனம் வாடகை பாக்​கி​யாக ரூ.9.74 கோடி நிலுவை வைத்​துள்​ளது” என வாதிட்​டார்.

அதையடுத்து நீதிப​தி​கள், “இந்த வழக்கு கடந்த 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக நிலு​வை​யில் இருந்​துள்​ளது. கோயில் நிலத்தை குத்​தகைக்கு எடுத்த நபர், அந்த நிலத்தை மனு​தா​ரர் நிறு​வனத்​துக்கு குத்​தகை மாற்​றம் செய்​துள்​ளார்.

அதன்​படி அந்த நிறு​வனம் வாடகையை முறை​யாக செலுத்​த​வில்லை என்​ப​தால்​தான் தனி நீதிபதி அந்த தொகையை வசூலிக்க உத்​தர​விட்​டுள்​ளார். கோயி​லில் அன்​றாடம் நடை​பெறும் பூஜைகள் மற்​றும் மத ரீதியி​லான சடங்​கு​களை நிகழ்த்த கோயில் நிர்​வாகங்​கள் இது​போன்ற குத்​தகை வாடகை வரு​மானத்​தையே நம்​பி​யுள்​ளன.

எனவே தனி நீதிப​தி​யின் உத்​தரவை நாங்​களும் உறுதி செய்​கிறோம்” எனக்​கூறி அம்​ரு​தாஞ்​சன் நிறு​வனத்​தின் மேல்​முறை​யீட்டு மனு​வைத் தள்​ளு​படி செய்து உத்​தரவிட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT