தமிழகம்

‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ என்று முழங்க காங்கிரஸுக்குதான் தகுதி உள்ளது: பீட்டர் அல்போன்ஸ் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘லஞ்சம் தவிர், நெஞ்​சம் நிமிர்’ என்று முழங்க இந்​தி​யா​விலேயே காங்​கிரசுக்கு மட்​டும்​தான் முழுத் தகுதி இருக்​கிறது என, தமிழக காங்​கிரஸ் மூத்த தலை​வர் பீட்​டர் அல்​போன்ஸ் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில், காம​ராஜரின் 124-வது பிறந்​த​நாள் விழா நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதன் ஒரு பகு​தி​யாக, “லஞ்​சம் தவிர் நெஞ்​சம் நிமிர்” என்ற தலைப்​பிலான சிறப்பு விழிப்​புணர்வு ஒலி​நா​டாவை கன்​னி​யாகுமரி எம்பி விஜய் வசந்த் வெளி​யிட, அதனை முன்​னாள் எம்பி பீட்​டர் அல்​போன்ஸ் பெற்​றுக் கொண்​டார்.

இந்த விழா​வில் பேசிய எம்பி விஜய் வசந்த், “தற்​கால இளைஞர்​களை வெறும் அறிக்​கைகள் மூலம் ஈர்க்க முடி​யாது. ரீல்​ஸ்​கள் மற்​றும் பாடல்​கள் மூல​மாகவே அவர்​களை சென்​றடைய முடி​யும்.

எனவே, இந்த காம​ராஜர் பாடலை அனை ​வரும் தங்​களது சமூக ஊடகப் பக்​கங்​களில் பகிர்ந்​து, அடுத்த 15 நாட்​களுக்கு அனைத்து காங்​கிரஸ் நிகழ்ச்​சிகளி​லும் ஒலிக்​கச் செய்ய வேண்​டும்” என்​றார்.

தொடர்ந்து பேசிய மூத்த தலை​வர் பீட்​டர் அல்​போன்​ஸ், “தொழில​திபர் அனில் அம்​பானி ரூ.40,000 கோடியைத் திருப்​பிச்செலுத்​தாத நிலை​யிலும், பிரதமர் மோடி அவரை தன்​னுடன் பிரான்​ஸ்க்கு விமானத்​தில் அழைத்​துச் செல்​கிறார்.

அமெரிக்​கா​வில் அதானிக்கு ரூ.2,400 கோடி அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. பாஜக ஊழலின் ஊற்​றுக்​கண்​ணாகத் திகழ்​கிறது. ‘லஞ்​சம் தவிர், நெஞ்​சம் நிமிர்’ என்று முழங்க இந்​தி​யா​விலேயே காங்​கிரசுக்கு மட்​டும்​தான் முழுத் தகுதி இருக்​கிறது” என்​றார்.

பிரதமருக்கு கடிதம்

பெட்​ரோல், டீசல் விலையை குறைக்க மத்​திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர், எம்​.பி.க்​கள் சசி​காந்த் செந்​தில் (திரு​வள்​ளூர்), ஆர்​.சுதா (மயி​லாடு​துறை) ஆகியோர் பிரதமர் மோடிக்கு தனித்​தனியே கடிதம் எழு​தி​யுள்​ளனர்​.

SCROLL FOR NEXT