பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் நேற்று சென்னை திரும்பினர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 11 மணி வரை இந்த நிலை நீடித்தது. | படங்கள்: எம்.முத்துகணேஷ் |

 
தமிழகம்

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் விடு​முறை முடிந்து மக்​கள் ஒரே நேரத்​தில் சென்னை திரும்​பிய​தால் பேருந்​து, ரயில் நிலை​யங்​களில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. நெடுஞ்​சாலைகளில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

பொங்கல் பண்​டிகையை கொண்​டாட சென்​னை​யில் வசிக்​கும் வெளியூரைச் சேர்ந்த மக்​கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்கு சென்​றனர். 4 நாட்​கள் பொங்கல் விடு​முறை ஞாயிற்​றுக்​கிழமை​யுடன் முடிந்​த​தால், நேற்று பள்​ளி, கல்​லூரி மற்​றும் அலு​வல​கம் செல்ல வேண்​டும் என்​ப​தற்​காக பெரும்​பாலான மக்கள் நேற்று முன்​தினம் மதியம் முதல் பயணத்தை தொடங்​கினர்.

தென்​மாவட்​டங்​களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில்​கள் அனைத்​தி​லும் மக்​கள் கூட்​டம் நிரம்பி வழிந்​தது. வழக்​க​மாக இயக்​கப்​படும் ரயில்​களு​டன் கூடு​தலாக 30-க்​கும் மேற்​பட்ட சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​பட்​டன.

அனைத்​துச் சிறப்பு ரயில்​களி​லும் டிக்​கெட்​கள் விற்​றுத் தீர்ந்​து​விட்ட நிலை​யில், டிக்​கெட் கிடைக்​காத பொது​மக்​கள் பொதுப் பெட்​டி​யிலும் பயணித்​தனர். இதனால் ரயில்​கள் நிரம்பி வழிந்​தன.

தாம்​பரம், சென்னை எழும்​பூர் மற்​றும் சென்ட்​ரல் ரயில் நிலை​யங்​களில் நேற்று அதி​காலை முதல் பயணி​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. மேலும், தமிழக போக்​கு​வரத்து துறை சார்​பிலும் கூடு​தலாக சென்னை நகருக்கு மட்​டும் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட சிறப்பு பேருந்​துகளும், மற்ற முக்​கிய நகரங்​களுக்கு 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பேருந்​துகளும் இயக்​கப்​பட்​டன.

இது தவிர, சொந்த வாக​னங்​களில் சென்​றவர்​கள் நேற்று சென்னை நோக்கி படையெடுத்​தனர். இதன் காரண​மாக, சென்​னை-​திருச்சி தேசிய நெடுஞ்​சாலை​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. குறிப்​பாக, விக்​கிர​வாண்டி - விழுப்​புரம் சாலை, மேல்​மரு​வத்​தூர் ஆகிய பகு​தி​களில் பல கி.மீ. தூரத்​துக்கு வாக​னங்​கள் ஊர்ந்து செல்​லும் நிலை பிற்​பகல் வரை நீடித்​தது.

சென்னை புறநகரிலும் சிங்​கப்​பெரு​மாள் கோயில் முதல் தாம்​பரம் ஜிஎஸ்டி சாலை வரை என பல்​வேறு பகு​தி​களி​லும் கடுமை​யான போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மேலும், கிளாம்​பாக்​கம் பேருந்து முனை​யத்​தில் மக்​கள் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது.

கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​தில் இருந்து சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களுக்கு நேற்று அதி​காலை முதல் கூடு​தலாக மாநகர பேருந்​துகள் இயக்​கப்​பட்​டது.

நண்​பகல் வரை பல்​வேறு ஊர்​களில் பயணி​கள் வந்த வண்​ணம் இருந்​தனர். இதனால், நேற்று மதி​யம் வரை கிளாம்​பக்​கத்​தில் அதி​கள​வில் பயணி​கள் கூட்​டம் காணப்​பட்​டது.

இதனிடையே, நெம்​மேலி​யில் முதல்​வர் பங்​கேற்ற விழா நேற்று நடந்​த​தால், கிழக்கு கடற்​கரை சாலை​யில் வாக​னங்​கள் அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. மேலும், ஏராள​மான போலீ​ஸார் அங்கு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​ட​தால், ஜிஎஸ்டி சாலை​யில் நெரிசலை கட்​டுப்​படுத்த போது​மான போலீ​ஸார் இல்​லாத​தால் வாகன ஓட்​டிகள் கடும் அவதி​யடைந்​தனர்.

SCROLL FOR NEXT