சென்னை: உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் நெடுமாறன் (வயது 57) ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நேற்று காலமானார்.
இளம் வயதிலேயே புத்த மதத்தை தழுவி புத்த துறவியாக வாழ்ந்து வந்த அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, இந்திய நேரப்படி நேற்று காலை 8.45 மணிக்கு காலமானார்.
அவரது இறுதிச்சடங்கு புத்த மதப்படி மெல்பர்ன் நகரில் நடைபெறுகிறது. பழ.நெடுமாறனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதால் அவரும், அவரது மனைவியும் மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இயலவில்லை என உலகத் தமிழர் பேரமைப்பு தெரிவித்துள்ளது.