வண்டலூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி

 
தமிழகம்

செங்கல்பட்டு தொகுதியில் கொளுத்தும் வெயிலில் அனல் பறக்கும் பிரச்சாரம்

பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தொகு​தி​யில் திமுக சார்​பில் எம்​.கே.டி கார்த்​திக் தண்​ட​பாணி, அதி​முக சார்​பில் கஜா என்​கிற கஜேந்​திரன், நாதக சார்​பில் அமுதா நம்​பி​யார், தவெக சார்​பில் எஸ்​.​தி​யாக​ராஜன், பகுஜன் சமாஜ் கட்சி சார்​பில்சரவணன், தமிழக வாழ்​வுரிமை கட்சி சார்​பில் எஸ்​.செல்​வம் (எ) செல்லா மற்​றும் 13 சுயேட்​சைகள் உள்​ளிட்ட 19 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர்.

திமுக - சாதனை​களைக் கூறி வாக்கு சேகரிப்பு

திமுக வேட்​பாளர் கார்த்​திக் தண்​ட​பாணி, தொகு​தி​யில் நன்கு அறி​முக​மானவ​ராக இருந்​தா​லும், முதன்​முறை​யாக சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிடு​கிறார்.

திமுக அரசின் சாதனை​களைச் சொல்லி வாக்கு சேகரிக்​கும் இவர், திமுக அரசு அறி​வித்த அனைத்து திட்​டங்​களும் தொகுதி மக்​களுக்கு வழங்​கப்​படும் என, வாக்​குறுதி அளித்து வரு​கிறார்.

          

மேலும் தொகுதிக்கு என்ன செய்​யப்​படும் என்​ப​தை​யும் விவரித்​தும், தான் நகராட்சி தலை​வ​ராக இருந்தபோது சிறந்த நிர்​வாகத்தை வழங்​கியது​போல் தொகு​திக்கு சிறந்த எம்​எல்​ஏ.​வாக இருப்​பேன் எனவும் கூறி மக்​களிடம் பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வரு​கிறார்.

கூடுவாஞ்சேரி அருகே காயராம்பேட்டில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கஜா என்கிற கஜேந்திரன்.

அதி​முக - மக்​கள் பாதிப்​பு​களை விளக்கி பிரச்​சா​ரம்

அதி​முக வேட்​பாளர் கஜா என்​கிற கஜேந்​திரன், அதி​முக ஆட்​சி​யில் செய்த சாதனை​களை சொல்​லி​யும், தேர்​தல் அறிக்​கை​யில் இடம் பெற்​றுள்​ளவை நிறைவேற்​றப்​படும் என்​றும், திமுக அரசால் மக்​கள் எவ்​வாறு பாதிக்​கப்​பட்​டனர் என்​பதை விளக்​கி​யும் பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். தொகுதி முழு​வதும் நன்கு அறியப்​பட்​ட​வர் என்பதால் உற்​சாக​மாக களத்​தில் வலம் வரு​கிறார்.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதா நம்பியார்

நாதக - அடிப்​படை வசதி​களை நிறைவேற்ற உறுதி

நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் அமுதா நம்​பி​யார், பல்​வேறு யுக்​தி​களைக் கையாண்டு வாக்கு சேகரித்து வரு​கிறார். ‘‘மக்​களை தொந்​தரவு செய்​யாமல் அவர்​களின் ஆதர​வைப் பெற முயற்​சித்து வரு​கிறோம்.

தொகு​தி​யில் அனைத்து மக்​களுக்​கும் அடிப்​படை வசதி​களை நிறை வேற்​றிக் கொடுப்​பேன்’’ என வாக்​காளர்​களிடம் உறுதி அளித்து வரு​கிறார்.

தவெக - நீர்​நிலைகளைப் பாது​காக்க முக்கியத்துவம்

தவெக வேட்​பாளர் எஸ்​.​தி​யாக​ராஜன், ‘‘தொகு​தி​யில் உள்கட்​டமைப்பு வசதிக்கு முக்கியத்துவம் அளிக்​கப்​படும். திமுக - அதி​முக என மக்​கள் மாறி மாறி வாக்​களித்து ஏமாற்​றமடைந்து விட்​டனர்.

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் தியாகராஜன்.

அதனால் தற்​போது மக்​கள் மாற்​றத்தை விரும்​பு​கின்​றனர்’’ என நம்​பிக்​கை​யுடன் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

கோடை வெயில் சுட்​டெரித்து வரும் நிலை​யில், அதற்கு இணை​யாக பிர​தான கட்​சிகளின் பிரச்​சா​ர​மும் செங்கல்பட்டு தொகு​தி​யில் அனல் பறக்க நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT