தமிழகம்

ஆபரேஷன் சிந்தூர் நினைவாக 500 கிலோ எடையில் ஐம்பொன் நினைவுத் தூண்: கும்பகோணம் பகுதியில் தயாராகிறது

செய்திப்பிரிவு

கும்பகோணம்: கும்​பகோணம் வட்​டம் மூப்​பக்​கோ​விலில், 500 கிலோ எடை​யில் ஐம்​பொன்​னால் ஆன ஆபரேஷன் சிந்​தூர் நினைவுத் தூண் வடிவ​மைக்​கப்​பட்டு வரு​கிறது.

காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஆண்டு ஏப்​ரல் 22-ம் தேதி சுற்​றுலா பயணி​கள் மீது பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதற்கு பதிலடி​யாக இந்​திய ராணுவம் கடந்​தாண்டு மே மாதம் 7-ம் தேதி ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை தொடங்​கியது. இதில், பாகிஸ்​தான் மீது இந்​திய ராணுவம் அதிரடி தாக்​குதலை நடத்​தி, அங்​கிருந்த தீவிர​வா​தி​களின் முகாம் மற்​றும் பாகிஸ்​தான் ராணுவ நிலைகள் சில​வற்றை அழித்​தது. இதன் முதலாம் ஆண்டு தினம் நேற்று நினைவு கூரப்​பட்​டது.

இதற்​கிடையே, ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை வெற்​றிகர​மாக நடத்​திக் காட்​டிய இந்​திய ராணுவத்தை கவுரவப்​படுத்​தும் வகை​யில், கடலூரில் இயங்கி வரும் ஷைன் இந்​தியா சோல்​ஜர்ஸ் வெல்​பஃர் அசோசி​யேஷன் சார்​பில் ஐம்பொன்​னால் ஆன நினை​வுத் தூண் வடிவ​மைக்க முடி​வெடுக்​கப்​பட்​டது.

அதன்​படி, கும்​பகோணம் வட்​டம் மூப்​பக்​கோ​விலில் ஸ்த​பதி குமார் தலை​மையி​லான குழு​வினர் ரூ.10 லட்​சம் மதிப்​பில் 500 கிலோ எடை​யில் 8 அடி உயரத்​தில் ஐம்​பொன்​னால் ஆன நினை​வுத் தூண் வடிவமைக்​கும் பணியை கடந்த 2 மாதங்​களாக மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இந்த நினை​வுத் தூணின் அடித்​தளம் 2 அடி விட்​ட​மும், ஒன்​றரை அடி அகல​மும், அதன் மேல் ஒரு அடி பத்​ம​மும் கொண்​ட​தாக இருக்​கும். அதற்கு மேல் மையத்​தூண் 2 அடி​யிலும், குங்​குமச் சிமிழ் இரண்​டரை அடி​யிலும், தலைப்​பாகத்​தில் குங்​குமம் வர்​ணம் ஒரு அடி​யிலும் அமைக்​கப்​படு​கிறது. மையத்​தூணில் முப்​படைகளின் இலச்​சினை​கள் பொருத்​தப்​படும்.

ராணுவத்தில் ஒப்படைக்கப்படும்: இப்​பணி​கள் நிறைவடைந்த பிறகு பிரத்​யேக வாக​னத்​தின் மூல​மாக டெல்​லிக்கு கொண்டு சென்று இந்திய ராணுவ தலை​மையகத்​தில் ஒப்படைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்ளது.

இதற்​கான ஏற்​பாடு​களை கடலூர் ஷைன் இந்​தியா சோல்​ஜர்ஸ் வெல்​பஃர் அசோசி​யேஷன் தொண்டு நிறு​வனத் தலை​வர் மில்ட்ரி பாபு, ஆலோ​சகர் சத்​தி​ய​நா​ராயணன், ஒருங்​கிணைப்​பாளர் அரவிந்​தன் மற்​றும் நிர்​வாகி​கள், முன்​னாள் படைவீரர்​கள் நலச் சங்​கத்​தினர் செய்து வரு​கின்​றனர். முன்​ன​தாக, முதலா​மாண்டு நினைவு தினத்​தையொட்டி நேற்று மா​திரி தூணுக்​கு மலர்​ தூவி மரி​யாதை செலுத்​தப்​பட்​டது.

SCROLL FOR NEXT