தமிழகம்

என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் பழனிசாமி 2 நாட்களுக்கு பிரச்சாரம்

செய்திப்பிரிவு

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்​பாளர்​களை ஆதரித்து, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, நாளை​ முதல் 2 நாட்​களுக்கு சென்​னை​யில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்.

தேர்​தல் அறிவிக்​கப்​பட்ட பின்​னர் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மாவட்ட வாரி​யாக பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். சென்னை மாவட்​டத்​தில் 16 தொகு​தி​கள் உள்​ளன. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 13 இடங்​களில் அதி​முக​வும், தலா ஓர் இடத்​தில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்​சிகளும் போட்​டி​யிடு​கின்​றன.

          

இதன் வேட்​பாளர்​களை ஆதரித்து பழனி​சாமி நாளை​யும் (8-ம் தேதி), நாளை மறு​தின​மும் (9-ம் தேதி) பிரச்​சா​ரம் மேற்​கொள்​ளவுள்​ளார். அதன்​படி, நாளை காலை 9 மணிக்கு வேளச்​சேரி தொகு​தி​யில் காந்தி ரோடு ஜங்​ஷன், காலை 10 மணிக்கு சைதாப்​பேட்டை தொகு​தி, ஆலந்​தூர் ரோடு, காலை 11 மணிக்கு விரு​கம்​பாக்​கம் தொகு​தி, அருணாச்​சலம் ரோடு, மாலை 4 மணிக்கு தியாக​ராயநகர் தொகுதி சிஐடி நகர், மாலை 5 மணிக்கு அண்​ணாநகர் தொகுதி டிபி சத்​திரம், மாலை 6 மணிக்கு வில்​லி​வாக்​கம் தொகு​தி, எம்​டிஎச் ரோடு, இரவு 7 மணிக்கு கொளத்​தூர் தொகு​தி, லட்​சுமி​யம்​மாள் கோயில் அரு​கில், இரவு 8 மணிக்கு பெரம்​பூர் அசோக் பில்​லர் ஆகிய இடங்​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்.

தொடர்ந்​து, 9-ம் தேதி காலை 9 மணிக்கு சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​தி, இருசப்ப தெரு (டாக்​டர் நடேசன் சாலை), காலை 10 மணிக்கு ஆயிரம் விளக்கு தொகு​தி, கரு​மாரி​யம்​மன் கோயில் (புஷ்பா நகர்), மாலை 4 மணிக்கு ராயபுரம் தொகு​தி, பெரிய​பாளை​யத்​தம்​மன் நகர் அரு​கில் (திரு​வொற்​றியூர் நெடுஞ்​சாலை), மாலை 5 மணிக்கு துறை​முகம் தொகுதி அரசு அச்​சகம் அரு​கில் (தங்​க​சாலை), மாலை 6 மணிக்கு திரு.​வி.க.நகர் மற்​றும் எழும்​பூர் தொகு​தி​யில் அம்​பிகா ஓட்​டல் அரு​கில் (புளியந்​தோப்பு நெடுஞ்​சாலை) ஆகிய இடங்​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்கிறார்.

SCROLL FOR NEXT