பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: முதன்மைத் தேர்வாளர்களால் விடைக்குறிப்பு சரிபார்ப்பு

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: முதன்மைத் தேர்வாளர்களால் விடைக்குறிப்பு சரிபார்ப்பு
Updated on
1 min read

சென்னை: பிளஸ்-2 பொதுத்​தேர்வு எழு​திய மாணவர்​களின் விடைத்தாள் திருத்​தும் பணி நேற்று தொடங்​கியது. முதல்​நாளில் முதன்​மைத் தேர்​வாளர்​களால் விடைக்​குறிப்பு சரி​பார்க்​கப்​பட்​டது.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் பிளஸ்-2 பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி​யுடன் நிறைவு பெற்​றது. இத்​தேர்வை தமிழகம் முழு​வதும் சுமார் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர்.

தேர்​வு​கள் முடிந்த பின்​னர் மாணவர்​களின் விடைத்​தாள்​கள் மண்டல சேகரிப்பு மையங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டன. அங்கு விடைத்​தாள்​கள் பிரித்​து, திருத்​துதல் முகாம்​களுக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன. தொடர்ந்து திருத்​துதல் பணி​களை ஏப்​ரல் 8-ம் தேதி​முதல் தொடங்​கு​வதற்கு தேர்​வுத்​துறை திட்​ட​மிட்​டது.

தேர்தல் காரணம்

அதன்​பின் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் காரண​மாக விடைத்​தாள் திருத்​துதல் பணி ஏப்​ரல் 6-ம் தேதியே தொடங்​கும் என்று தேர்​வுத் துறை தெரி​வித்​தது. அதன்​படி பிளஸ்​-2, பிளஸ்-1 அரியர் தேர்வு விடைத்​தாள் திருத்​துதல் தமிழகம் முழு​வதும் உள்ள 83 முகாம்​களில் நேற்று தொடங்​கியது.

முதல்​நாளில் முதன்மை தேர்​வாளர்​கள் திருத்​துதல் பணி​களில் ஈடு​பட்​டனர். அப்​போது விடைக் குறிப்பு சரி​யாக இருக்​கிற​தா, அதில் ஏதேனும் மாற்​றங்​களை செய்ய வேண்​டுமா என சோதனை செய்​து​கொண்​டனர்.

தேர்வு முடிவு மே 8 வெளியீடு

இதைத் தொடர்ந்து இன்று (ஏப்​ரல் 7) முதல் ஏப்​ரல் 20--ம் தேதி வரை இதர ஆசிரியர்​கள் விடைத்​தாள்​களை திருத்தி முடிப்​பார்​கள். இதில் சுமார் 46 ஆயிரம் முது​நிலை ஆசிரியர்​கள் ஈடுபட உள்​ளனர். இதனுடனேயே பிளஸ்-1 அரியர் தேர்வு விடைத்​தாள்​களும் திருத்​தப்பட உள்​ளன.

அதன்​பின் மதிப்​பெண் பதிவேற்​றம் உள்​ளிட்ட பணி​களை முடித்து திட்​ட​மிட்​டபடி தேர்வு முடிவு​கள் மே 8-ல் வெளி​யிடப்பட உள்​ளன. திருத்​துதல் பணி​யின்​போது ஆசிரியர்​கள் உரிய வழி​காட்டு நெறி​முறை​களைப் பின்​பற்றி கவனத்​துடன் செயல்பட வேண்​டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in