திருப்போரூர்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 175 தொகுதிகளில் சுற்றுப் பயணம் முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 28-ம் தேதி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
திருப்போரூர் அடுத்த மாமல்லபுரம் சாலையில் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் மேடை அமைக்கப்பட உள்ளது .
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வரவேற்பது குறித்தும், அரங்க அமைக்கப்பட உள்ள இடத்தையும் மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் அதிமுகவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.சீனிவாசன் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி. பக்தவச்சலம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.