எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. | படம் : எஸ்.குரு பிரசாத் |

 
தமிழகம்

அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: பழனிசாமி நம்பிக்கை

செய்திப்பிரிவு

மேட்டூர்: அதிமுக தலை​மையி​லான கூட்​டணி அதிக இடங்​களில் பெரும்​பான்​மை​யாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நம்பிக்கை தெரி​வித்​துள்​ளார்.

எடப்​பாடி சட்​டப்​பேரவை தொகுதி​யில் அதிமுக சார்​பில் அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி 8-வது முறை​யாக போட்​டி​யிடு​கிறார். இதனையொட்​டி, நேற்று தேர்​தல் நடத்​தும் அலு​வல​ரான நடராஜனிடம் தனது வேட்​புமனுவை தாக்​கல் செய்​தார்.

          

பின்​னர், செய்தியாளர்களிடம் அவர் கூறிய​தாவது: அதி​முக​வுக்கு வெற்றி வாய்ப்பு பிர​காச​மாக உள்​ளது. தேமு​தி​க​வுக்கு அரை சதவீதம்​தான் வாக்கு வங்கி உள்​ளது. தேமு​தி​க​வுக்கு 2026 மாநிலங்​களவை உறுப்​பினர் சீட்டு வழங்​கு​வ​தாகச் சொன்​னேன். அதற்​குள் அவர்​கள் மனநிலை மற்​றும் அணி​ மாறிவிட்​டார்​கள்.

உதயநிதி ஸ்டா​லின் சிபிஎஸ்சி பள்ளி நடத்தி வரு​கிறார். அதில் மும்​மொழிப் பாட​மும் நடத்​தப்​படு​கிறது. தங்​களுக்கு தேவை என்​றால் மட்​டும் எந்த மொழியை வேண்​டு​மா​னாலும் அனு​ம​திப்​பார்​கள். தமிழகத்​தில் நடை​பெறு​வது சட்​டப்​பேரவை தேர்​தல்.

மக்​களவை தேர்​தல் அல்ல என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டு பேச வேண்​டும். ஒன்​று, இரண்டு திட்​டங்​கள் விடு​பட்​டிருந்​தால் மீண்​டும் சட்​டப்​பேரவைத் தேர்​தலில் வெற்றி பெற்று அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் விடு​பட்​டது அனைத்​தும் நிறைவேற்றித் தரப்​படும்.

15-ம் தேதி கன்​னி​யாகுமரி​யில் பிரதமர் பங்​கேற்​கும் தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நானும் பங்கு பெறுகிறேன். ஆளுநரிடம் கொடுக்​கப்​பட்ட ஊழல் பட்​டியலை விட அமலாக்​கத் துறை ஆதா​ரத்​துடன் தமிழக டிஜிபி​யிடம் அனுப்​பிய ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்​யாமல் இருந்​தனர்.

அதி​முக சார்​பில் நீதி​மன்​றத்தை நாடி உத்​தரவு பெற்​றும் வழக்கு பதிவு செய்​யப்​பட​வில்​லை. இதன்​மீது அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் சட்​டரீ​தி​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். அதி​முக ஆட்​சி ​யில்தான் சட்​டத்​தின் ஆட்சி நடை​பெற்​றது. தமிழகத்​தில் அதி​முக பல்​வேறு திட்​டங்​களை தந்தகட்​சி.

தற்​போது மிகப்​பெரிய வலிமை​யான எதிர்க்​கட்​சி​யாக உள்​ளது. ஆ.ராசா தொடர்​பாக வெளி​யான ஆடியோ இந்​திய அளவில் வைரலானது. கருணாநிதி உடல்​நிலை சரி​யில்​லாமல் இருந்​த​போது வீட்டுச் சிறை​யில் வைக்​கப்​பட்​ட​தாக​வும், பட்​டியல் இனமக்​கள் பாகு​பாடு பார்க்​கப்​பட்​ட​தாக​வும், ஆடியோ​வில் பேசப்​பட்​டிருந்​தது.

அது குறித்து தான் நான் கருத்துக் கூறினேன். இந்த விவகாரத்தில் ராசா மீது நடவடிக்கை எடுப்​பதை விட்​டு​விட்டு என் மீது பாய்​வ​தில் என்ன இருக்​கிறது? அதி​முக தலை​மையி​லான கூட்​டணி அதிக இடங்​களில் வெற்றி பெறும். அதி​முக அதிக இடங்​களில் பெரும்​பான்​மை​யாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT