தமிழகம்

பழனிசாமியின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வேட்பு மனு​வில் முக்​கி​யத் தகவலை மறைந்த வழக்கை ரத்​து செய்​யக் கோரும் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் மேல்​முறை​யீட்டு மனுவை தள்​ளு​படி செய்ய வேண்​டும் என உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்​கல் செய்​யப்பட்டுள்​ளது.

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது வேட்​புமனு​வில் முக்​கி​யத் தகவலை மறைத்​த​தாக மிலானி அளித்த புகாரின்​பேரில் பதிவு செய்​யப்​பட்ட வழக்கு விசா​ரணை நடந்து வருகிறது.

          

இதற்கு தடை கோரிய பழனிசாமியின் மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்ற நீதிபதி விக்​ரம் நாத் தலை​மையி​லான அமர்வு நேற்று விசா​ரித்தது. அப்​போது தமிழக அரசு தாக்​கல் செய்த பதில் மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: வேட்​புமனு​வில் முக்​கி​யத் தகவலை மறைப்​பது தெரிய​வந்​தால் யார் வேண்​டு​மா​னாலும் வழக்கு தொடர மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டம் அனு​ம​திக்​கிறது.

வேட்பு மனு​வில் முக்​கி​யத் தகவலை மறைத்​தது தொடர்​பான மனுவை விசா​ரித்​துப் புலன்​வி​சா​ரணை நடத்த காவல்​துறைக்கு உத்​தர​விட நீதித்​துறை நடு​வருக்கு அதி​காரம் உண்​டு.

இந்த விவ​காரத்​தில் தொகு​தி​யின் வாக்​காளர் அல்​லது போட்​டி​யிட்டு தோல்​விடைந்த வேட்​பாளர் மட்​டுமே வழக்கு தொடர முகாந்​திரம் உண்டு என்ற வாதம் ஏற்​புடைதல்ல.

எனவே, பழனிசாமியின் மேல்​முறை​யீடு மனுவை தள்​ளு​படி செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த விவ​காரத்​தில் விளக்க மனு தாக்​கல் செய்ய 4 வார அவகாசம் கோரிய பழனி​சாமியின் கோரிக்​கையை ஏற்ற உச்ச நீதி​மன்​றம், விசா​ரணையை மே 19-ம் தேதிக்கு தள்ளி வைத்​து உத்தரவிட்டது.

வேட்​புமனு​வில் முக்​கி​யத் தகவலை மறைத்த விவ​காரத்​தில் பழனி​சாமிக்கு எதி​ராகப் பதிவு செய்​யப்​பட்​டுள்ள வழக்கு விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆண்டு இடைக்​காலத் தடை விதித்​தது குறிப்​பிடத்​தக்கது.

SCROLL FOR NEXT