தமிழகம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டுள்ளது: பழனிசாமி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் சட்டம் ஒழுங்கு சீர்​கெட்​ட​தால்தான் மாநிலத்​தின் ஒட்​டுமொத்த வளர்ச்​சி​யும் சீர்​கெட்டுள்​ளது என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்​பாக அவர் தனது எக்ஸ் தள பக்​கத்​தில் பதி​விட்​டிருப்​ப​தாவது: தமிழகத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மையி​லான திமுக ஆட்​சி​யில் சட்டம் ஒழுங்கு பாதாளத்​துக்கு சென்​றிருப்​பதை கடந்த 24 மணி நேரத்​தில் வந்த செய்​தி​களே தெளி​வாக உணர்த்​துகின்​றன.

கும்பகோணம் அருகே பட்​டீஸ்​வரம் பள்ளி மாணவர்​கள் இடையே​யான மோதலில் தாக்​கப்​பட்ட பிளஸ் 2 மாணவர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்.

மயி​லாடு​துறை மாவட்​டம் சீர்​காழி​யில் எடை தரா​சால் அடித்து காய்​கறி கடைக்​காரர் கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். தென்​காசி​யில் சொத்து தகராறில் விவ​சாயி வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டுள்​ளார்.

சேலம் தோப்​பூர் பகுதி​யில் தலை துண்​டித்து கொல்​லப்பட்ட இளைஞரின் தலையை போலீ​ஸார் தேடி வருகின்றனர்.

நாகர்​கோ​விலில் பட்​டப்​பகலில் சாலை​யில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து திருட முயற்சி நடந்​துள்​ளது என தொடர்ச்​சியாக வரும் செய்​தி​கள் அதிர்ச்சி அளிக்​கின்​றன. பள்ளி மாணவர்​கள் இடையே படிப்புதான் வளர வேண்டும்.

ஆனால், ஸ்டா​லின்ஆட்​சி​யில் வன்​முறை போக்​கு​தான் அதி​கரித்து வரு​கிறது. கொலை வரை நீண்​டுள்ள இந்த மோதல் வெறியை கட்​டுப்படுத்​த தவறியதற்கு முதல்​வரின் அரசு வெட்​கப்பட வேண்​டும்.

விவ​சா​யி, வியா​பாரி, பெண், இளைஞர் என யாருக்​குமே பகல், இரவென எந்த நேரத்​தி​லும் துளிகூட பாது​காப்பு இல்​லாத ஒரு அவலத்​தின் மொத்த உரு​வான ஆட்​சி​யைத் தான் ஸ்டா​லின் நடத்தி வரு​கிறார். சட்டம் ஒழுங்கு சீர்​கெட்​ட​தால்தான் தமிழகத்​தின் ஒட்​டுமொத்த வளர்ச்​சி​யும் சீர்​கெட்டுள்​ளது.

சுய விளம்​பரத்தில் திளைக்​கும் முதல்​வர் இதை எப்போது உணரப் போகிறாரோ? ஆட்​சி​யில் இருக்​கப் போகும் 4 மாதங்​களிலா​வது சட்​டம் ஒழுங்​கின் மீது கவனம் செலுத்​து​மாறு தி​முக அரசை வலி​யுறுத்​துகிறேன்​. இவ்​வாறு அவர்​ பதி​விட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT