இயற்கையை காப்பது நம்மையே காப்பதாகும்: உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கருத்து

சென்னையில் நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். உடன் தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எல்.சுந்தரேசன், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு. | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னையில் நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். உடன் தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எல்.சுந்தரேசன், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு. | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: இயற்கையை பாது​காப்​பது நம்​மையே பாது​காப்​ப​தாகும் என்று உச்ச நீதி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் தெரி​வித்​துள்​ளார். தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தின் தென் மண்டல அமர்வு சார்​பில் நடந்த தென்​னிந்​திய அளவி​லான சுற்​றுச்​சூழல் கருத்​தரங்​கின் நிறைவு விழா நேற்று நடை​பெற்​றது.

இக்​கருத்​தரங்​கையொட்​டி, சட்​டக்கல்லூரி மாணவர்​களிடையே நடத்​தப்​பட்ட பல்​வேறு போட்​டிகளில் வெற்றி பெற்​றவர்​களுக்கு உச்ச நீதி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் விருதுகளை வழங்கி பேசி​ய​தாவது: இந்தக் கருத்தரங்கில் சுற்றுச்சூழல் சட்டங்கள், திடக்கழிவு, மருத்துவக்கழிவு மேலாண்மை, கடற்கரை பாதுகாப்பு ஆகிய 3 தொழில்நுட்ப விவாதங்கள் நடைபெற்றுள்ளன.

மக்​களுக்கு அரசமைப்​புச் சட்​டம் வழங்​கிய சுற்​றுச்சூழல் உரிமையை பசுமை தீர்ப்​பா​யங்​கள் பாது​காக்​கின்​றன. இந்​தத் தமிழ் மண் ஈராயிரம், மூன்றாயிரம் ஆண்​டு​களாகவே காத்து நின்​று, இயற்கையோடு இயைந்த வாழ்வை தமிழர்​களுக்கு சொல்​லித் தந்​தது. இயற்கையை மறந்துவிட்ட வாழ்க்கை ஒரு நாளும் வாழ்க்​கை​யாக இருக்க முடி​யாது.

இது​தான் இந்த மண்​ணில் எழுந்து நின்ற அத்​தனை இலக்​கி​யங்​களும் கற்​றுத் தந்த பாடம். மண்ணை மறந்​து​விட்ட மனிதன் தன் வாழ்க்​கை​யில் சிறந்​த​தாக சரித்​திரமே இல்​லை. அதைத்​தான் சங்க இலக்​கி​யங்​கள் கற்றுத் தந்​தன.

இந்த மண்​ணுக்​கான இயற்கை, இந்த மண்​ணின் வளம், இந்த மண்​ணைச் சார்ந்த இயற்கை​யினுடைய காற்​று, மழை அனைத்​துமே நமக்கு வாழ்க்​கை​யினுடைய முக்​கி​யத்​து​வத்தை கற்​றுத் தந்​தன.

ஆதலி​னால் இயற்கையை பாது​காப்​பது நம்​மையே பாது​காப்​பது, நம்மை பாது​காப்​பது, இந்த சமு​தா​யத்தை பாது​காப்​பது, சமு​தா​யத்தை பாது​காப்​பது உலகம் முழுக்க அணி திரண்டு ஒன்று சேர்ந்து இயற்கையை பாது​காப்​பது என்​பதை உணர வேண்​டும். இவ்​வாறு பேசினார்.

பசுமை தீர்ப்​பாய, தென் மண்டல அமர்​வின் நீதித்​துறை உறுப்​பினர் புஷ்பா சத்​ய​நா​ராயணா பேசும்​போது, "சுற்​றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு, பலஆண்​டு​களுக்கு முன்பே பிளாஸ்​டிக் ஒழிப்பு இயக்​கத்தை நீல​கிரி மாவட்​டத்​தில் தொடங்​கிய​வர்.

மீண்​டும் மஞ்சப்பை இயக்​கத்​தை​யும் செயல்​படுத்​தி, நாட்​டிலேயே முதன் முறையாக துணிப்பை வழங்​கும் ஏடிஎம்​களை திறந்​துள்​ளார்" என்​றார். சுப்​ரியா சாஹூ பேசும்​போது, "தமிழக அரசு பசுமை தமிழ்​நாடு இயக்​கம் உள்​ளிட்ட 4 முக்​கிய இயக்​கங்​களை தொடங்​கி​யுள்​ளது.

கடந்த 4 ஆண்​டு​களில் 10.9 கோடி மரக்​கன்​றுகள் நடப்​பட்​டுள்​ளன. சங்க இலக்​கி​யங்​களை படித்​து, அவற்​றில் குறிப்​பிடப்​பட்​டுள்ள மரங்​களின் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கன்​றுகளை தமிழக அரசு நட்​டுள்​ளது. வன விலங்கு​கள் வாழ்​வதற்கு சில குறிப்​பிட்ட மரங்​கள் தேவை என்​பதை அறிந்த பல மரங்​களை நட்டு வரு​கிறது" என்​றார்.

இந்​நிகழ்ச்​சி​யில் பசுமை தீர்ப்​பாய தலை​வர் பிர​காஷ் ஸ்ரீவஸ்​த​வா, தொழில்​நுட்ப உறுப்​பினர் பிர​சாந்த் கார்​க​வா, மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல்​.சுந்​தரேசன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.

<div class="paragraphs"><p>சென்னையில் நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். உடன் தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எல்.சுந்தரேசன், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு. | படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 டிசம்பர் 2025

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in