தமிழகம்

தமிழகத்தில் 4 மாதங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் கடந்த 4 மாதங்​களில் கொலை, கொள்​ளை, பாலியல் வன்​கொடுமை சம்​பவங்​கள் அதி​கரித்​திருப்​ப​தாக சட்​டப்​பேர​வை​யில் முன்​னாள் முதல்​வர் கே.பழனி​சாமி குற்​றம்​சாட்​டி​னார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று காவல்​துறை, தீயணைப்பு மற்​றும் மீட்​புப்​பணி​கள் துறை மானியக் கோரிக்​கைகள் மீதான விவாதத்​தில் முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி பேசி​ய​தாவது: இன்​றைய தினம் காவல்​துறை இக்​கட்​டான சூழலில் உள்​ளது.

5 ஆயிரம் பெண் காவலர் உள்பட 10 ஆயிரம் காவலர்​கள் நியமிக்​கப்​படு​வர் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த எண்​ணிக்கை போதாது. காவல்​துறை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட மொத்த பணி​யிடங்​களின் எண்​ணிக்கை ஒரு லட்​சத்து 33 ஆயிரத்து 667 ஆகும்.

தற்​போது 1 லட்​சத்து 18 ஆயிரத்து 851 பேர் பணி​யில் உள்ள நிலை​யில் 15 ஆயிரம் இடங்​கள் காலி​யாக உள்​ளன. காவலர்​கள் ஓய்​வு​பெறு​வதற்கு முன்​னரே அப்​பணி​யிடங்​களை கண்​டறிந்​து, தேர்வு நடத்தி தேவை​யான ஆட்​களை தேர்வு செய்​து​கொள்ள வேண்​டும்.

தவெக அளித்த வாக்​குறு​திப்​படி காவலர்​களின் அடிப்​படை ஊதி​யத்தை ரூ.18,200-லிருந்து ரூ.25 ஆயிர​மாக அதி​கரிக்க வேண்​டும். காவலர்​களின் நலனை மேம்​படுத்​திட காவலர் நலன் மற்​றும் பணி நிபந்​தனை​கள் சட்​டத்தை கொண்​டுவர வேண்​டும்.

காவலர்​களுக்கு சுழற்சி முறை​யில் வார விடு​முறை வழங்​கும் திட்​டத்தை நடை​முறைப்​படுத்த வேண்​டும். சென்னை மாநகரில் வாகன சோதனை​யின்​போது உரிய ஆவணங்​களை காண்​பித்​தா​லும் வாகன ஓட்​டிகளுக்கு அபராதம் விதிக்​கப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன. மேலும் இவ்​வாறு வசூலிக்​கப்​படும் அபராத பணத்தை போலீ​ஸார் வட்​டிக்கு விடு​வ​தாக செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இத்​தகைய சம்​பவங்​கள் சென்​னை​யி்ல் மட்​டும்​தான் நடந்​துள்​ள​தா? அல்​லது தமிழகத்​தின் இதர பகு​தி​களி​லும் நிகழ்ந்​துள்​ளதா என்​பது குறித்து ஆய்வு செய்ய வேண்​டும். மக்​கள் பிரச்​சினை​களுக்​காகத்​தான் எதிர்க்​கட்​சிகள் போராட்​டம் நடத்​துகின்​றன.

இந்த ஆட்​சி​யில் போராட்​டம், ஆர்ப்​பாட்​டம், ஊர்​வலங்​கள் நடத்த அனு​மதி மறுக்​கப்​படு​கிறது. தவெக ஆட்​சிக்கு வந்து கடந்த 114 நாட்​களில் விவ​ சா​யிகள், பால் உற்​பத்​தி​யாளர்​கள், மருத்​து​வர்​கள். நர்​சுகள், ஆசிரியர்​கள் என பல்​வேறு தரப்​பினர் கோரிக்​கைகளுக்​காக போராடி வரு​கின்​றனர்.

அவர்களை அழைத்​துப்​பேசி பிரச்​சினைக்கு தீர்வு காண அரசு முன்வர வேண்​டும். கடந்த 4 மாதங்களில் கொலை, கொள்​ளை, பாலியல் வன்​முறை சம்​பவங்​கள் அதி​கள​வில் நிகழ்ந்து வரு​கின்​றன. போக்சோ வழக்​கு​கள் அதி​கரித்​துள்​ளன. இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT