ஜஸ்டின் மணிகண்டன்

 
தமிழகம்

பழநியில் ரூ.100 கோடி நிலப்பதிவு முறைகேடு: 4 அலுவலகங்களில் ஆய்வு

செய்திப்பிரிவு

பழநி: பழநி​யில் ரூ.100 கோடி நிலப்பதிவு முறை​கேடு விவ​காரத்​தில் சிக்​கிய சார்​ப​தி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன் பணி​யாற்​றிய பழநி, ஒட்​டன்​சத்​திரம் உள்பட 4 சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் சிறப்பு தணிக்கை குழு​வினர் ஆய்வு நடத்​தினர்.

பழநி நில விவகாரம் மட்டுமின்றி பழநி​யில் உள்ள 1.66 ஏக்​கர் அரசு புறம்​போக்கு நிலத்தை தனி​நபருக்கு பதிவு செய்து கொடுத்​த​தாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணி கண்டன் மீது மேலும் ஒரு புகார் எழுந்தது.

அவரது பணிக்​காலத்​தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்​களை​யும் ஆராய சிவகங்கை உதவி பதிவுத்​துறை தலை​வர் சீனி​வாசன் தலைமையில் 6 பேர் குழு அமைக்கப்பட்டு நேற்று முன்​தினம் பழநி மாவட்ட பதி​வாளர் அலு​வல​கத்​திலும் 2-வது நாளாக நேற்​று பழநி மாவட்ட பதி​வாளர் அலு​வல​கத்​திலும் ஆய்வு நடந்தது.

ஜஸ்​டின் மணி​கண்டன் ஏற்​கெனவே பணியாற்​றிய ஒட்​டன்​ சத்​திரம், குஜிலியம்​பாறை, கொடைக்​கானலில் உள்ள சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களுக்கு 3 குழுக்​களாகப் பிரிந்து சென்று ஆய்வு செய்​தனர். இன்று விடுமுறை நாளி​லும் ஆய்வு செய்ய முடிவு செய்​துள்​ளனர்.

இதனிடையே, சார்​ப​தி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன் நேற்று 6-வது நாளாக திண்​டுக்கல் சிபிசிஐடி அலு​வல​கத்​தில் விசா​ரணைக்கு ஆஜரா​னார். நாளை​யுடன் (ஆக. 3)அவருக்கு நீதி​மன்​றம் வழங்​கிய நிபந்​தனை இடைக்​கால முன்​ஜாமீன் முடிவடைகிறது. அதன் பின்பு அவரை கைது செய்ய சிபிசிஐடி திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

நிலமோசடி வழக்​கில் ஏற்​கெனவே 4 பேர் கைது செய்​யப்​ பட்​ட நிலை​யில், நிலத்தரகர், ஆவணம் தயார் செய்து கொடுத்​தவர் உள்பட மேலும் சிலரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT