தமிழகம்

வாக்குப்பதிவு நாளன்று தினக்கூலி தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை

மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ​வாக்​குப்​ப​திவு நாளன்று ஊதி​யத்​துடன் கூடிய விடு​முறை அளிக்க வேண்​டும் என்று மாநில அரசுகளுக்கு தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக இந்​திய தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த மார்ச் 15-ம் தேதி தமிழகம் உள்​ளிட்ட மாநிலங்​களின் சட்​டப்​பேர​வை​களுக்​கான பொதுத்​தேர்​தல் மற்​றும் கோவா, குஜ​ராத், கர்​நாட​கா, மகா​ராஷ்டி​ரா, நாகாலாந்து மற்​றும் திரிபுரா ஆகிய மாநிலங்​களின் 8 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் ஏப்​.23-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது.

          

மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச்சட்​டம், 1951-இன் பிரிவு 135B-ன்​படி, வணி​கம், வர்த்​தகம், தொழில் துறை நிறு​வனங்​கள் அல்​லது வேறு ஏதேனும் நிறு​வனங்​களில் பணிபுரி​யும், வாக்​களிக்​கத் தகு​தி​யுள்ள ஒவ்​வொரு நபருக்​கும் வாக்​குப்​ப​திவு நாளன்று ஊதி​யத்​துடன் கூடிய விடு​முறை வழங்​கப்பட வேண்​டும்.

இத்​தகைய ஊதி​யத்​துடன் கூடிய விடு​முறைக்​காக ஊழியர்​களின் ஊதி​யத்​தில் எந்த பிடித்​த​மும் செய்​யப்​படக்​கூ​டாது. இந்த விதி​முறை​களை மீறும் எந்​தவொரு முதலா​ளி​யும் அபராதத்​துக்கு உள்​ளா​வார்​கள். அனைத்து தினக்​கூலி மற்​றும் தற்​காலிகத் தொழிலா​ளர்​களும் வாக்​குப்​ப​திவு நாளன்று ஊதி​யத்​துடன் கூடிய விடு​முறை பெறத் தகு​தி​யுடைய​வர்​கள்.

இந்த விதி​முறை​களைத் துல்​லிய​மாகப் பின்​பற்​று​வதற்​கும், அனைத்து வாக்​காளர்​களும் சுதந்​திர​மாக​வும் வசதி​யாக​வும் தங்​கள் வாக்​குரிமை​யைப் பயன்​படுத்​து​வதை உறு​தி​ செய்​வதற்​கும் தேவை​யான உத்​தர​வு​களை அனைத்து சம்​பந்​தப்​பட்​ட​வர்​களுக்​கும் பிறப்​பிக்​கு​மாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT