தமிழகம்

தி.நகர் முன்னாள் எம்எல்ஏ-வுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்றது குறித்து விளக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ​தி.நகர் அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான ஜெ.சத்​தி​ய​நா​ராயணனுக்கு எதி​ரான சொத்து குவிப்பு வழக்கை விசா​ரணைக்கு ஏற்​றுக்​கொண்​டது குறித்து ஒரு வாரத்​தில் விளக்​கமளிக்க சென்னை எம்​பி, எம்​எல்​ஏக்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2016-21 கால​கட்​டத்​தில் சென்னை தி.நகர் அதி​முக எம்​எல்​ஏ​வாக பதவி வகித்த சத்யா என்ற ஜெ.சத்​தி​ய​நா​ராயணன் வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.9.44 கோடி அளவுக்கு சொத்து குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக குற்​றஞ்​சாட்டி அவர் மீதும், அவரது மனைவி ஜெயசித்​ரா​வுக்கு எதி​ராக​வும் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​திருந்​தனர்.

இந்த வழக்​கில் லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் தாக்​கல் செய்த குற்​றப்​பத்​திரி​கையை விசா​ரணைக்கு ஏற்று சென்னை எம்​பி,எம்​எல்​ஏக்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றம் கடந்த பிப்​ர​வரி​யில் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து சத்​தி​ய​நா​ராயணன் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக நடந்​தது. அப்​போது, “தங்​களுக்கு எதி​ரான குற்​றப்​பத்​திரி​கையை விசா​ரணைக்கு எடுத்​துக்​கொள்​ளும் முன்​பாக தங்​களது தரப்பு வாதங்​களை முன்​வைக்க அவகாசம் அளிக்​க​வில்​லை. குற்​றப்​பத்​திரி​கையை ஏற்​றுக்​கொண்​டதற்​கான காரணங்​களை தெரிவிக்​காமல் சிறப்பு நீதி​மன்​றம் இயந்​திரத்​தன​மான உத்​தர​வைப் பிறப்​பித்​துள்​ளது” என சத்​தி​ய​நா​ராயணன் தரப்​பில் வாதிடப்​பட்​டது.

அந்த வாதத்தை ஏற்ற நீதிப​தி, குற்​றப்​பத்​திரி​கையை விசா​ரணைக்கு ஏற்று சிறப்பு நீதி​மன்​றம் கடந்த பிப்​ர​வரி மாதம் பிறப்​பித்த உத்​தரவை ரத்​துசெய்து உத்​தர​விட்​டார். அதே​நேரம், வழக்கை விசா​ரணைக்கு ஏற்​றுக்​கொண்​டதற்​கான காரணங்​கள் குறித்து ஒரு வாரத்​தில் விளக்​கமளிக்க சென்னை எம்​.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT