சென்னை | சாலை தடுப்பில் பைக் மோதிய விபத்தில் பகோடா கடை ஊழியர் உயிரிழப்பு

சென்னை | சாலை தடுப்பில் பைக் மோதிய விபத்தில் பகோடா கடை ஊழியர் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: பைக் விபத்​தில் பகோடா கடை ஊழியர் உயி​ரிழந்த நிலை​யில் நண்​பர்​கள் இரு​வர் காயம் அடைந்​தனர். காஞ்​சிபுரம் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் நிதீஷ்கு​மார் (23). சென்னை முகப்​பேர் பகு​தி​யில் தங்கி சாலையோர பகோடா கடை​யில் வேலை செய்து வந்​தார்.

அதே பகு​தி​யைச் சேர்ந்த லலித் குமார் (21), சஞ்​சய் (24) ஆகிய இரு​வரும் முகப்​பேர் பகு​தி​யில் சாலை​யோர வடை கடை​யில் வேலை செய்து வரு​கின்​றனர். நண்​பர்​களான 3 பேரும் நேற்று முன்​தினம் நள்​ளிரவு ஒரே பைக்​கில் முகப்​பேரிலிருந்து போரூர் டோல்​கேட் நோக்கி வேக​மாக சென்​றனர்.

தாம்​பரம் மதுர​வாயல் பைபாஸ் சாலை​யில் சென்​ற​ போது, பைக் திடீரென கட்​டுப்​பாட்டை இழந்து சாலைத் தடுப்​பில் மோதி விபத்​துக்​குள்​ளானது. இந்த விபத்​தில் நிதீஷ்கு​மார் தலை​யில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். லலித் குமார் மற்​றும் சஞ்​சய் காயங்​களு​டன் உயிர்தப்​பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்​துக்கு வந்த மதுர​வாயல் போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார், நிதீஷ்கு​மாரின் உடலைக் கைப்​பற்றி பிரேதப் பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

காயமடைந்த 2 பேரை​யும் மீட்டு அதே மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்த்​தனர். இந்த விபத்து தொடர்​பாக மதுர​வாயல் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறுகை​யில், “நண்​பர்​கள் 3 பேரும் ஹெல்​மெட் அணி​யாமல் ஒரே பைக்​கில் சென்​ற​தாக முதல் கட்ட தகவல் கிடைத்​துள்​ளது. இது குறித்து தொடர்ந்து விசா​ரித்து வரு​கிறோம்'' என்​றனர்.

சென்னை | சாலை தடுப்பில் பைக் மோதிய விபத்தில் பகோடா கடை ஊழியர் உயிரிழப்பு
விஜயகாந்த் பாதையில் அன்னதான சேவை தொடரும்: பிரேமலதா அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in