தமிழகம்

சிக்னல் இல்லாத 4 ஆயிரம் ரயில்வே ‘கேட்’களை ரயில்கள் வராத நேரங்களில் திறந்து வைக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ரயில்​வே​யில் நாடு முழு​வதும் 16,499 ரயில்வே கேட்​டு​கள் (கடவு பாதைகள்) உள்​ளன.

இதில் 10,159 கேட்​டு​களில் இன்​டர்​லாக்​கிங் வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. சிக்னல் இல்​லாமல் 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கேட்​டு​கள் உள்​ளன. இந்த வகை கேட்​டு​கள் எப்​போதும் மூடி இருக்க வேண்​டும்.

சாலைகளில் ஏதேனும் வாக​னங்​கள் வந்​தால், ஸ்டேசன் மாஸ்​டரிடம் உரிய அனு​மதி பெற்​று, கேட்டை திறந்​து, அதன்​பின் மூடியே வைத்து இருக்க வேண்​டும்.

இந்த விதி​களால் கேட் கீப்​பர்​களோடு சாலையை கடப்​பவர்​கள், குறிப்​பாக இருசக்கர வாகன ஓட்​டிகள் சண்டை போடு​வது தாக்​குவது போன்ற சம்​பவங்​களும் நடை​பெற்று வரு​கின்​றன.

இதற்கு தீர்​வாக, இனி இந்த கேட்​டு​களை எப்​போதும் திறந்து வைத்​திருக்க ரயில்வே துறை உத்​தர​விட்​டுள்​ளது.

ரயில் கோட்ட மேலா​ளர்​கள், அதி​காரி​கள் ஆய்வு செய்​து, ஆய்​வுக்​குப் பின் கேட் கீப்​பர்​களுக்கு உத்​தர​விட கூறியுள்ளது.

இனி ரயில்​கள் வரும்​போது மட்​டுமே ரயில்வே கேட்​டு​கள் மூடப்​படும். ரயில்​கள் வராத மற்ற நேரங்​களில் திறந்து இருக்க வேண்​டும் என தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து,ர​யில்வே தொழிற்​சங்க முன்​னாள் தலை​வர் மனோகரன் கூறும்​போது, “ரயில்​வே​யில் ‘சி’ பிரிவு கேட்​டு​களில் பெரும்​பாலான கேட்​டு​கள், எப்​போதும் மூடியே இருக்க வேண்​டும் என்ற ரயில்வே விதி​களில் தற்​போது மாற்​றம் செய்​திருப்​பது வரவேற்​கத்​தக்​கது​"என்​றார்.

SCROLL FOR NEXT