ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் குலதெய்வக்கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது.
தேர்தலில் ஒவ்வொரு முறை வேட்புமனு தாக்கல் செய்யும்போதும், முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பும் குலதெய்வக் கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓபிஎஸ் வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓபிஎஸ் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தை பிறக்கட்டும்” எனக் கூறிவிட்டு சென்றார்.
தொடர்ந்து அவரது குல தெய்வமான வனப்பேச்சி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார்.