தமிழகம்

“தனிக்கட்சி தொடங்குவேன் என எந்தச் சூழலிலும் சொல்லவில்லை” - ஓபிஎஸ்

தமிழினி

சென்னை: “நான் தனிக்கட்சி தொடங்குவேன் என எப்போதும், எந்தச் சூழலிலும் சொல்லவில்லை" என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “செங்கோட்டையன் தவெகவுக்கு சென்ற பிறகு அவரும் என்னிடம் பேசவில்லை, நானும் அவருடன் பேசவில்லை.

அடுத்த கட்ட நகர்வு தமிழக மக்களின் எண்ணப்படி தான் இருக்கும். அதிமுக, தொண்டர்களின் இயக்கம். அது எப்போதும் பலவீனமடையாது. டெல்லியில் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழல் குறித்து எடுத்துக் கூறினேன். அவர் கவனமாக கேட்டு, அன்பான வார்த்தைகளை கூறி அனுப்பியுள்ளார்.

பிரிந்திருப்பவர்கள் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என அமித் ஷாவிடம் கூறினேன். நான் தனிக்கட்சி தொடங்குவேன் என எப்போதும், எந்தச் சூழலிலும் சொல்லவில்லை.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT