சென்னை: சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, அந்த உரையை அதிமுகவினர் புறக்கணித்தனர்.
ஆனால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் முழுமையாக அமர்ந்து கேட்டனர். ஆளுநர், உரையை படிக்காமல் சென்றதற்கு ஐயப்பன் கண்டனமும் தெரிவித்தார். இதன் பின்னர், பேரவைத் தலைவரின் அறைக்கு ஓபிஎஸ் சென்றார்.
அங்கு அமைச்சர் சேகர்பாபுவுடன் ஓபிஎஸ் சிறிது நேரம் பேசியுள்ளார். அப்போது, திமுகவுக்கு வருமாறு ஓபிஎஸ்ஸை சேகர்பாபு அழைத்ததாக கூறப்படுகிறது.