தமிழகம்

“நான் சங்கர மடத்துக்கா போக முடியும்?” - விரக்தியில் ஓபிஎஸ்

செய்திப்பிரிவு

நான் இனி சங்கர மடத்துக்கா செல்ல முடியும்? என்னை இந்த அளவுக்கு அரசியலில் தனிமைப்​படுத்தும் வகையில் நான் என்ன தவறு செய்து​விட்​டேன். அந்த உண்மையைச் சொல்லுங்கள் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின்​ 78-வது பிறந்த நாளை முன்னிட்டு போடியில் நேற்று பொதுமக்​களுக்கு நல உதவிகளை வழங்கினார் ஓபிஎஸ். அதன் பிறகு செய்தி​யாளர்​களிடம் பேசிய அவர் கூறிய​தாவது: ஜெயலலிதா இறந்த பிறகு எனக்கு முதல்​வ​ராவதில் விருப்​ப​மில்லை. என்னை கட்டாயப்​படுத்தி முதல்வர் ஆக்கி​னார்கள். பிறகு பல்வேறு வகையிலும் என்னை அவமானப்​படுத்தி முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்​றி​னார்கள்.

          

ஒவ்வொரு முறையும் எதிர்க்​கட்​சியில் இருந்​தாலும் ஆளுங்​கட்​சி​யிலும் இருந்​தாலும் ஆட்சி முடிந்​ததும் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்வது எனது மரபு. அந்த அடிப்​படை​யிலேயே திமுக ஆட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்​தேன். ஆனால், நான் திமுக-வுக்கு ஆதரவு தெரிவிப்பது போல கருத்து பரவிவிட்டது.

டிடிவி.​தினகரன் என்னை பசுந்தோல் போர்த்திய புலி என்று கூறியுள்​ளார். அரசியல் நாகரிகம், பண்பாடு கருதி நான் கடின வார்த்​தைகளை பயன்படுத்​துவது இல்லை. நான் நினைத்தால் அவரை விட மோசமான வார்த்​தைகளை பயன்படுத்தி கருத்துக் கூற முடியும். நான் இனி சங்கர மடத்துக்கா செல்ல முடியும்? என்னை இந்த அளவுக்கு அரசியலில் தனிமைப்​படுத்தும் வகையில் நான் என்ன தவறு செய்து​விட்​டேன். அந்த உண்மையைச் சொல்லுங்கள் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.

திமுக பலமான கூட்டணி அமைத்து உள்ளது. ஆகவே, அவர்களை வெல்ல அதிமுக-​வினர் அனைவரும் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். நான் போடி தொகுதியில் போட்டி​யிடு​கிறேனா என்று ஆண்டவனுக்குத் தான் தெரியும். தனிக்​கட்சி தொடங்க மாட்டேன்.

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் அதிமுக-வில் வகுத்த சட்ட விதிமுறைகளை மீண்டும் கொண்டு வரும் வரை அதிமுக-வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டே இருப்​பேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​​தார்​.

SCROLL FOR NEXT