தமிழகம்

‘சாலை அமைக்க ஒதுக்கும் நிதியில் ரூ.100-ல் 40 மட்டுமே செலவிடப்படுகிறது’ - நீதிபதிகள் அதிருப்தி

செய்திப்பிரிவு

மதுரை: சாலை அமைக்க ஒதுக்​கும் நிதி​யில் ரூ.100-ல் ரூ.40-ஐ மட்​டும் செல​விடு​கின்​றனர். 60 சதவீத பணம் குறிப்​பிட்ட சிலரின் பாக்​கெட்​களுக்கு சென்​றால் எப்​படி தர​மான சாலையை அமைக்க முடியும் என உயர் நீதி​மன்​றம் அதிருப்தி தெரி​வித்​துள்​ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்​கறிஞர் ரமேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறி​யிருந்​ததாவது: மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயிலைச் சுற்​றியுள்ள மாசி வீதி​கள் உள்​ளிட்ட மாநக​ராட்​சிப் பகுதி​களில் பழைய தார்​சாலைகளை முறை​யாகத் தோண்டி அகற்​றாமலும், சாலை​யோர ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றாமலும், பழைய சாலை​யின் அகலத்​தைக் குறைத்து புதிய சாலை அமைத்​துள்​ளனர்.

இத​னால் சாலைகளின் உயரம் அதி​கரித்து சாலை​யோரங்​களில் உள்ள குடி​யிருப்​பு​கள் மற்​றும் வணிக நிறு​வனங்​கள் பள்​ளமாகி மழைநீர் புகுந்து மக்​களுக்கு பாதிப்பு ஏற்​படு​கிறது. இதில் தவறு செய்​யும் ஒப்​பந்​ததா​ரர்​கள் மற்​றும் மாநக​ராட்சி அதி​காரி​கள் மீது நட​வடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறி​யிருந்​தார்.

இந்த மனு நீதிப​தி​கள் பி.வேல்​முருகன், கே.கே.ராமகிருஷ்​ணன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தரவு: தற்​போது சாலைகள் சரியாக அமைப்​ப​தில்லை. ஏற்​கெனவே போடப்​பட்ட சாலைக்​குமேல் தாரை ஊற்றி தடவி விட்டு சாலை போட்​ட​தாக கணக்கு காட்​டு​கின்​றனர். ஏற்​கெனவே போடப்​பட்ட சாலையை அகற்​றி​விட்டு, புதிய சாலை அமைக்க வேண்​டும் என்​பது விதி. அதை முறை​யாகப் பின்​பற்​று​வதில்லை. இதுபோன்ற சாலைகள் அமைத்​தால் எதிர்​காலத்​தில் மதுரையைக் கண்​டறிய முடி​யாது.

பிரதமர், முதல்​வர் என முக்​கியப் பிர​முகர்​கள் வந்​தால் இரவோடு, இர​வாக சாலைகளை அமைக்​கின்​றனர். புதிதாக சாலை அமைக்க ஒவ்​வொரு வார​மும் பிரதமரும், முதல்​வரும் வரவா முடியும்?

சாலை அமைக்க ஒதுக்​கும் நிதி​யில் 100 ரூபாயில் 40 ரூபாயை மட்​டுமே செல​விடு​கின்​றனர். 60 ரூபாய் யாருக்கு, எதுக்கு, எப்​படி, எப்​போது போகிறது என்​பது தெரிய​வில்லை. சாலை அமைக்க ஒதுக்​கும் பணத்​தின் பெரும் பகுதி குறிப்​பிட்ட சிலரின் பாக்​கெட்​களுக்கு போனால் எப்​படி தர​மான சாலை அமைப்​பது?

தர​மாக சாலை அமைத்​தால் 4 ஆண்​டுகள் வரை புதிய சாலை போட வேண்​டியது வராது. ஆன்​லைன், திறந்​தவெளி ஒப்​பந்​தப்​புள்​ளி​களி​லும் முறைகேடு நடக்​கிறது. எனவே, இந்த வழக்​கில் மதுரை மாநக​ராட்சி சாலை ஒப்​பந்​ததா​ரர், மாநக​ராட்சி தலை​மைப் பொறி​யாளர், மாநக​ராட்சி ஆணை​யர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் அனைத்து ஆவணங்​களு​டன் நவ.7-ல் ஆஜராகி விளக்​கம் அளிக்க வேண்​டும். இவ்​வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT