அமைச்​சர் லோகேஷ் தமிழ்ச்​செல்​வன்

 
தமிழகம்

ஆன்லைன் பத்திரப்பதிவுக்கு இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்: அமைச்சர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சேலம்: ஆன்லைன் மூலம் பத்​திரப்​ப​திவு செய்ய பொது​மக்​கள் இடைத்​தரகர்​களை நாடி ஏமாற வேண்​டாம் என வணிகவரித்​துறை மற்​றும் பதிவுத்​துறை அமைச்​சர் லோகேஷ் தமிழ்ச்​செல்​வன் தெரி​வித்​துள்​ளார்.

சேலத்​தில் வணிகவரித்​துறை மற்​றும் பதிவுத்​துறை அமைச்​சர் லோகேஷ் தமிழ்ச்​செல்​வன் செய்​தி​யாளர்​களிடம் கூறியது:

பத்​திரப்​ப​திவு ஆன்-லைன் மூலம் கொண்டு வரப்​பட்​டுள்​ள​தால் இடைத்​தரகர்​களுக்கு இங்கே இடம் கிடை​யாது. பத்​திர எழுத்​தர்​களின் பணி தொடர்ந்து இருக்​கும். ‘பிரசன்ட்​லெஸ்’ முறை​யில் ஆவணங்​களைப் பதிவேற்​றம் செய்​யும்​போது, அந்த ஆவணத்​தைத் தயாரித்த பத்​திர எழுத்​தரின் விவரம் ‘வாட்​டர்​மார்க்’ மூலம் அதில் இடம்​பெறும் வகை​யில் மென்​பொருளில் மாற்​றம் செய்து வரு​கிறோம். மேலும், 1997-ம் ஆண்​டிற்​குப் பிறகு வழங்​கப்​படா​மல் இருந்த பத்​திர எழுத்​தர் உரிமங்​களைப் புதிதாக வழங்​கவும் நட​வடிக்கை எடுத்து வரு​கிறோம்.

நிலங்​களுக்​கான வழிகாட்டி மதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. அந்​தக் குழு​வின் அறிக்கை வந்த பிறகு, எங்​கெல்​லாம் அதிக வேறு​பாடுகள் உள்​ளனவோ அங்​கெல்​லாம் ஆராய்ந்து, அதைச் சமன்​படுத்​து​வது குறித்து முடிவெடுக்​கப்​படும்.

பத்​திரப்​ப​திவு செய்ய பொது​மக்​கள் நேரடி​யாக பத்​திரப்​ப​திவு அலு​வல​கத்​திற்கு வந்​தால் அதி​காரி​களே ஆன்-லைன் மூலம் பத்​திரப்​ப​திவு செய்ய அனைத்து உதவி​களை​யும் செய்​வார்​கள். விரைந்து வேலை முடிய வேண்​டும் என்​ப​தற்​காகப் பொது​மக்​கள் இடைத்​தரகர்​களை நாடி ஏமாற வேண்​டாம். அரசு நிர்​ணயித்த கட்​ட​ணத்​தைச் செலுத்​தினால், அதி​கபட்​சம் ஒன்று அல்​லது இரண்டு நாட்​களுக்​குள் ஆவணங்​கள் கைக்​குக் கிடைத்​து​விடும். முடிந்​தவரை அன்​றைய தினமே ஆவணங்​களைத் திருப்​பித் தர அறி​வுறுத்​தி​யுள்​ளோம்.

வரி செலுத்​து​வோரை எந்த வகை​யிலும் துன்​புறுத்​தக் கூடாது என்று அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT